'இலங்கைக்கு எதிரான ஐ.நா.வின் தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும்'

'இலங்கைக்கு எதிரான ஐ.நா.வின் தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும்'

1 mins read
6dddafef-1539-4736-8ec3-a5298f097d5a
-

புது­டெல்லி: இலங்­கை­யில் இறு­திக்­கட்ட உள்­நாட்­டுப் போரின்­போது தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக இழைக்­கப்­பட்ட மனித உரிமை மீறல்­க­ளுக்கு இலங்கை அரசை பொறுப்­பேற்க வைக்­கும் தீர்­மா­னம் ஒன்று ஐ.நா.வில் இன்று வாக்­கெ­டுப்­புக்கு வரு­கிறது.

தங்­கள் நாட்­டுக்கு எதி­ரான இந்­தத் தீர்­மா­னத்தை எதிர்த்து வாக்­க­ளிக்க வேண்­டும் என இந்­தியா உள்­ளிட்ட நாடு­களை இலங்கை அரசு கேட்­டுக்­கொண்டு உள்­ளது.

இதை ஏற்று இந்­தி­யா­வும் தீர்­மா­னத்­துக்கு எதி­ராக வாக்­க­ளிக்க உள்­ள­தாக தக­வல் வெளி­யாகி இருக்­கிறது.

ஆனால் இலங்­கைக்கு எதி­ரான இந்­தத் தீர்­மா­னத்தை இந்­தியா ஆத­ரிக்க வேண்­டும் என காங்­கி­ரஸ் மூத்த தலை­வ­ரும், முன்­னாள் மத்­திய அமைச்­ச­ரு­மான ப.சிதம்­ப­ரம் வலி­யு­றுத்தி உள்­ளார்.

இது தொடர்­பாக அவர் தனது டுவிட்­டர் தளத்­தில், "இலங்­கை­யில், குறிப்­பாக தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக மனித உரிமை மீறல்­கள் இருந்­ததை, இருப்­பதை அந்த நாடு மறுத்து வரு­வது வேத­னைக்­கு­ரி­யது.

"அந்த நாட்­டுக்கு எதி­ராக ஐ.நா.வில் கொண்டு வரப்­படும் தீர்­மா­னத்தை இந்­தியா நிச்­ச­யம் ஆத­ரித்து வாக்­க­ளிக்க வேண்­டும்.

இலங்­கை­யில் தமி­ழர்­கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளுக்கு மனித உரிமை மறுக்­கப்­படு­கிறது. எனவே, இந்­தியா அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக இருக்க வேண்­டும்," என ப.சிதம்­ப­ரம் மத்­திய அர­சுக்கு வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.