நீதிமன்ற உத்தரவுப்படி ஆற்று மணல் விற்க கோரிக்கை

நீதிமன்ற உத்தரவுப்படி ஆற்று மணல் விற்க கோரிக்கை

1 mins read

சென்னை: நீதி­மன்ற உத்­த­ர­வுப்­படி, மக்­க­ளுக்­கும் லாரி உரி­மை­யா­ளர்­க­ளுக்­கும் மணல் வழங்க பொதுப்­ப­ணித்­துறை அதி­கா­ரி­கள் முன்­வர வேண்­டும் என மணல் லாரி உரி­மை­யா­ளர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் பொதுப்­ப­ணித்­துறை வாயி­லாக குவா­ரி­களில் இருந்து மணல் விற்­கப்­ப­டு­கிறது. தற்­போ­தைய நில­வ­ரப்­படி, ஆறு இடங்­களில் மட்­டுமே இணை­யத்­தில் பதிவு செய்­வ­தன்­மூ­லம் ஆற்று மணல் வழங்­கப்­ப­டு­கிறது.

இத்­திட்­டத்­தில் பொதுமக்­கள் தனி­யா­க­வும் லாரி உரி­மை­யா­ளர்­கள் தனி­யா­க­வும் விண்­ணப்­பிக்க வழி­வகை செய்­யப்­பட்­டுள்­ளது.

ஆனால், லாரி உரி­மை­யா­ளர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­வ­தாக புகார் எழுந்­தது.

இது தொடர்­பான வழக்கை விசா­ரித்த உயர் நீதி­மன்ற மதுரை கிளை, இணை­யம் வழி­யான முன்­ப­தி­வில் மக்­க­ளுக்கு முன்­னு­ரிமை அடிப்­ப­டை­யில் மணல் வழங்க வேண்­டும்; அதன் பின் லாரி உரி­மை­யா­ளர்­க­ளுக்கு மணல் வழங்க வேண்­டும் என உத்­த­ர­விட்­டுள்­ளது.

தமிழ்­நாடு மணல் லாரி உரி­மை­யா­ளர்­கள் ஒருங்­கி­ணைந்த நல கூட்­ட­மைப்­பின் தலை­வர் ஆர்.பன்­னீர்­செல்­வம் கூறி­ய­தா­வது: இணை­யம் மணல் விற்­ப­னை­யில், லாரி உரி­மை­யா­ளர்­கள் பெய­ரில் கடத்­தல்­கா­ரர்­க­ளுக்கே மணல் விற்­பனை செய்­யப்­ப­டு­கிறது.

இத­னை­ய­டுத்து தமி­ழ­கத்­தில் மணல் விற்­ப­னை­யில் ஈடு­படும் லாரி உரி­மை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்கை 55,000ல் இருந்து 15,000 ஆக குறைந்­துள்­ளது.

நீதி­மன்­றத்­தின் உத்­த­ர­வுப்­படி, அனைத்து ஆற்­றுப்­ப­டு­கை­க­ளி­லும் சுற்­றுச்­சூ­ழல் விதி­க­ளைப் பின்­பற்றி மணல் எடுக்க அனு­ம­திக்க வேண்­டும்.

தேர்­தல் ஆணை­யத்­தின் அனு­ம­தி­யு­டன் பொதுப்­ப­ணித்­துறை அதி­கா­ரி­கள் இதற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும் என்று திரு பன்­னீர்­செல்­வம் தமி­ழக அர­சைக் கேட்­டுக்கொண்­டார்.