விவசாயி முதல்வருக்கு ஞானோதயம் பிறந்தது எப்போது? - ஸ்டாலின் கேள்வி

விவசாயி முதல்வருக்கு ஞானோதயம் பிறந்தது எப்போது? - ஸ்டாலின் கேள்வி

2 mins read
eb467527-b0d6-474b-9a01-b45645d79b62
சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் அத்தொகுதியில் நேற்று வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அதேபோல், இத்தொகுதியில் பாமக வேட்பாளர் கஸ்ஸாலி, நாம் தமிழர் உள்பட பிற கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களும் பரப்புரையில் ஈடுபட்டனர்.படம்: ஊடகம் -

காஞ்­சி­பு­ரம்: தமி­ழ­கத்­தில் ஏப்­ரல் 6ம் தேதி ஒரே கட்­ட­மாக சட்­டமன்றத் தேர்­தல் நடை­பெற உள்­ளது. தேர்­த­லில் பதி­வா­கும் வாக்­கு­கள் மே 2ம் தேதி எண்­ணப்­பட்டு அன்றே முடி­வு­கள் அறி­விக்­கப்­ப­டு­கிறது.

தேர்­தல் களத்­தில் அ.தி.மு.க. கூட்­டணி, தி.மு.க. கூட்­டணி, டி.டி.வி.தின­க­ர­னின் அ.ம.மு.க. கூட்­டணி, கமல்­ஹா­ச­னின் மக்­கள் நீதி மய்­யம் கூட்­டணி, நாம் தமி­ழர் கட்சி என்று 5 முனைப் போட்டி நில­வு­கிறது. சுயேச்சை வேட்­பா­ளர்­கள் பல­ரும் போட்டிக் களத்­தில் குதித்­துள்­ள­னர். தேர்­தல் தேதி நெருங்கி வரு­வ­தால் அர­சி­யல் கட்­சி­கள் தீவிர தேர்­தல் பரப்புரையில் ஈடு­பட்டு வரு­கின்­ற­ன.

இந்­நி­லை­யில், செய்­யூர், மது­ராந்­த­கம், உத்­தி­ர­மே­ரூர், காஞ்­சி­புரம் தொகுதி திமுக மற்­றும் கூட்­டணி வேட்­பா­ளரை ஆத­ரித்து திமுக தலை­வர் மு.க.ஸ்டா­லின் உத்­தி­ர­மே­ரூ­ரில் சனிக்கிழமை தேர்­தல் பரப்­பு­ரை­யில் ஈடு­பட்­டார்.

அப்­போது அவர் கூறி­ய­தா­வது:-

தற்­போது முத­ல­மைச்­ச­ராக இருக்­கக்­கூ­டிய எடப்­பாடி பழ­னி­சாமி தனது தேர்­தல் அறிக்­கை­யில் மத்­திய அர­சின் 3 வேளாண் சட்­டங்­க­ளால் தமி­ழக விவ­சா­யி­க­ளுக்கு எந்­தப் பாதிப்­பும் ஏற்­ப­டா­மல் அதி­முக எதிர்த்து குரல்­கொ­டுக்­கும் என்று இப்­போது திடீ­ரென ஞான உத­யம் வந்­த­து­போல தேர்­தல் வந்த கார­ணத்­தால் விவ­சா­யி­களை ஏமாற்ற வேண்­டும் என்­ப­தற்­காக ஓர் அறி­விப்பை அதி­முகவினர் தேர்­தல் அறிக்­கை­யில் கூறி­யுள்­ள­னர். இதே முத­ல­மைச்­சர் பழ­னி­சாமி இந்த சட்­டம் வந்த உடன் ஸ்டா­லி­னுக்கு விவ­சா­யம் தெரி­யாது என்று கூறி தனக்­குத்­தான் விவ­சா­யம் தெரி­யும் என தெரி­வித்­தார்.

அவர் (முத­ல­மைச்­சர் பழ­னி­சாமி) தற்­போது எங்கு சென்­றா­லும் தான் ஒரு விவ­சாயி, தான் ஒரு விவ­சாயி என தொடர்ந்து கூறி­வ­ரு­கி­றார்.

தன்னை ஒரு விவ­சாயி என அடை­யா­ளம் காட்­டிக்­கொண்டு அது­மட்­டு­மல்­லா­மல் போரா­டு­கிற விவ­சா­யி­களைப் பற்றி கொச்­சைப்­படுத்தி பேசி­னார்.

120 நாட்­களைத் தாண்டி இன்­றும் டெல்­லி­யில் போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர். அப்­படி போரா­டி­வ­ரும் விவ­சா­யி­க­ளைப் பார்த்து அவர்­கள் எல்­லாரும் தர­கர்­கள் என்று முத­ல­மைச்­சர் பழ­னி­சாமி கூறி­னார்.