கமல்ஹாசன்: என் மீது காவியும் ஒட்டாது; கறுப்பும் ஒட்டாது

கமல்ஹாசன்: என் மீது காவியும் ஒட்டாது; கறுப்பும் ஒட்டாது

1 mins read

கோவை: கோவை பீள­மேடு ரொட்­டிக்­கடை மைதா­னத்­தில் மக்­கள் நீதி மய்­யம் கட்சி சார்­பில் மண், மொழி, மக்­கள் காக்க என்ற பெய­ரில் தேர்தல் பொதுக்­கூட்­டம் சனிக்­கி­ழமை இரவு நடை­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தில் மக்­கள் நீதி மய்­யம் கட்­சி­யின் தலை­வர் கமல்­ஹா­சன் கலந்­து­கொண்டு பேசி­னார்.

"மக்­கள் பிரச்­சி­னையை சட்­ட­மன்­றம் மட்­டு­மின்றி ஐ.நா.சபை வரை பேச வேண்­டும் என்­றா­லும் பேசு­வேன். தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யில் மட்­டும் நான் மக்­க­ளின் பிர­தி­நிதி கிடை­யாது.

"உண்­மை­யா­கவே நான் மக்­கள் பிர­தி­நிதிதான். மக்­கள் பிரச்­சி­னைக்­காக குரல் கொடுப்­போம். இந்­தத் தொகு­தி­யில் வெற்றி பெற்­ற­வர்­கள் இங்கு எது­வும் செய்­ய­வில்லை. மக்­க­ளுக்குத் தேவை­யான திட்­டங்­களைப் பெறு­வது, மக்­க­ளின் உரிமை. சினி­மாவை நிறுத்­தி­விட்டு அர­சி­ய­லுக்கு வந்து இருக்­கி­றேன். காவி­யாக இருந்­தா­லும் கறுப்­பாக இருந்­தா­லும் சரி எந்த நிற­மும் என் மீது ஒட்­டாது.

"என் மீது எந்தச் சாய­மும் பூச முயற்­சிசெய்ய வேண்­டாம். குற்­ற­வா­ளி­களை ஒரு­மை­யில்தான் பேசு­வேன். அந்த அவ­மா­னத்தை அவர்­கள் ஏற்­றுக்­கொள்­ளத்­தான் வேண்­டும்," என்று கமல் பேசினார்.