மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசனை கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பார்த்த தொகுதி மக்கள் ஆர்வமாக அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள கூடினார்கள். அப்போது தவறுதலாக கமல்ஹாசனின் காலில் யாரோ ஒருவர் மிதித்துவிட்டார். அண்மையில்தான் காலில், அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இந்நிலையில் மீண்டும் காலில் வலி ஏற்பட்டதால், உடனடியாக தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்துக்கொண்டு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றார். அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில், காலில் வீக்கம் ஏற்பட்டதால், மருத்துவர்கள் நடிகர் கமலிடம் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து கமலின் பரப்புரைப் பயணத் திட்டங்களில் மாற்றம் செய்துள்ளதாக மநீம கட்சியினர் தெரிவித்துள்ளனர். படம்: ஊடகம்
காலை யாரோ மிதித்ததால் கமல் ஓய்வு; தேர்தல் பரப்புரைத் திட்டத்தில் மாற்றம்
1 mins read
-

