அகழாய்வில் தானியங்களைச் சேமித்து வைக்கும் களிமண் கலன் கண்டுபிடிப்பு

அகழாய்வில் தானியங்களைச் சேமித்து வைக்கும் களிமண் கலன் கண்டுபிடிப்பு

1 mins read
06d85bbf-1fee-4e74-95f2-89d4a7a95315
கொந்­த­கை­யில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது கிடைக்கப்பெற்ற தானியச் சேமிப்புப் பானை. படம்: ஊடகம் -

சிவ­கங்கை: சிவ­கங்கை மாவட்­டம் கீழ­டி­யில் தற்­போது 7ஆம் கட்ட அகழ்­வா­ராய்ச்சி நடந்து வரு­கிறது. இந்தப் பணி­கள் முத­லில் கீழ­டி­யி­லும் பிறகு கொந்­தகை, அக­ரத்­தி­லும் ஆரம்­பிக்­கப்­பட்டு நடை­பெற்று வரு­கின்­றன.

கீழ­டி­யில் தோண்­டப்­பட்ட ஒரு குழி­யில் பாசி மணி­கள், சில்­லு­வட்­டு­கள் மற்­றும் பானை ஓடு­கள் கண்டு­பி­டிக்­கப்­பட்­டன.

கொந்­த­கை­யில் வாய்ப் பகுதி மூடிய நிலை­யில் உள்ள முழு­மை­யான முது­மக்­கள் தாழி மற்­றும் சேத­முற்ற முது­மக்­கள் தாழி­கள் என பல கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

அக­ரத்­தில் ஒரு குழி தோண்டி அக­ழாய்வு மேற்­கொண்ட போது முத­லில் சேத­முற்ற நிலை­யில் சிறிய மண் பானை ஓடு­கள் கிடைத்­தன.

தொடர்ந்து குழியை ஆழ­மாகத் தோண்­டியபோது சேத­முற்ற நிலை­யில் தானி­யங்­கள் சேமித்து வைக்­கும் களிமண்­ க­லன் ஒன்று நேற்று கண்­ட­றி­யப்­பட்டு உள்­ளது.

இந்தக் கலன் சேத­முற்ற நிலை­யில் சுவ­ரு­டன் ஒட்­டிய நிலை­யில் உள்­ளது.

முந்­தைய காலங்­களில் களி­மண்­ணால் வட்ட உறை ஆக செய்து வீடு­களில் ஒன்­றின் மேல் ஒன்­றாக அடுக்கி வைத்து பூசி இருக்­கி­றார்­கள்.

இந்த கலன்­களில் நெல், தானி­யம் சேமித்து வைத்து, தேவைப்­படும் போது சிறுக, சிறுக எடுத்து மக்­கள் பயன்­ப­டுத்தி இருப்­ப­தாக தொல்­லி­யல் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.