'வீட்டுக்கு ஒரு படகு, ஐ-போன் வழங்குவோம்'

'வீட்டுக்கு ஒரு படகு, ஐ-போன் வழங்குவோம்'

1 mins read
2b7dbf5a-e73e-4ecd-a67b-c83d59c7ccc2
-

மதுரை: மதுரை தெற்­குத் தொகுதி சுயேச்சை வேட்­பா­ள­ராக கள மிறங்­கும் சர­வ­ணன் தனது தேர்­தல் வாக்­கு­று­தி­களை வெளி யிட்­டுள்­ளார். இவ­ரது வாக்­கு­றுதி களால் அதி­முக, திமு­க­வி­னர் ஆடிப்­போய் உள்­ள­னர்.

தனது 35 வாக்­கு­று­தி­கள் கொண்ட தேர்­தல் அறிக்­கை­யில், "தொகுதி மக்­கள் அனை­வ­ருக் கும் ஐ-போன் வழங்­கப்­படும். தொகுதி சில்ெலன்று இருக்க 300 அடி உயர செயற்கை பனி மலை உரு­வாக்­கப்­படும்.

"விடு­முறை நாட்­களில் மக்­கள் பொழு­து­போக்­கு­வ­தற்கு செயற்கை கடல் உரு­வாக்­கப்­படும். தேர்ந்து எடுக்­கப்­படும் 10 பேர் 100 நாட்­கள் சுற்­றுப்­ப­ய­ண­மாக நில­வுக்கு அழைத்­துச் செல்­லப்­படு வர்.

"இல்­லத்­த­ர­சி­க­ளுக்கு வீட்டு வேலை செய்­து­தர 'ரோபோ' வழங்­கப்­படும்.

"இளை­ஞர்­கள் தொழில் தொடங்க ஆளுக்கு ரூ.1 கோடி மானி­யம், போக்­கு­வ­ரத்து நெரி சலைக் குறைக்க கால்­வாய்­கள் வெட்டி வீட்­டுக்கு ஒரு படகு வழங்­கப்­படும்," என வாக்­கு­றுதி களை அள்ளி வீசி­யுள்­ளார்.