அறநிலையத்துறை: கோவிலில் அர்ச்சனை, பிரசாதம் கிடையாது

அறநிலையத்துறை: கோவிலில் அர்ச்சனை, பிரசாதம் கிடையாது

1 mins read
660903cc-ea34-4d64-b4b9-2bae10e8386c
-

தஞ்­சா­வூர்: தமி­ழ­கம் முழு­வ­தும் கொரோனா கிரு­மிப் பர­வல் அதி­க­ரித்து வரும் நிலை­யில், கோவில்­களில் பிர­சா­தம் கொடுப்­பதோ அர்ச்­சனை செய்­வதோ கூடாது என இந்து அற­நி­லை­யத்­துறை புதிய கட்­டுப்­பா­டு­களை விதித்­துள்­ளது.

பக்­தர்­களும் கோவில் ஊழி­யர்­களும் முகக்­க­வ­சம் அணி­ய­வேண்­டும். கோவில் வளா­கங்­களில் கிரு­மி­நா­சி­னி­யைக் கொண்டு கையைச் சுத்­தப்­ப­டுத்­திக் கொள்­ள­வேண்­டும்.

கோவில்­க­ளுக்கு குழந்­தை­கள், கர்ப்­பி­ணி­கள், முதி­ய­வர்­கள் வரு­வதை தவிர்க்­க­வும். கோவில்­களில் தேங்­காய், பூ, பழம் கொண்டு அர்ச்­சனை செய்­வது, பக்­தர்­க­ளுக்கு பிர­சா­தம், துளசி நீர் தரு­வது உள்­ளிட்­ட­வற்­றைத் தவிர்க்­கும்­ப­டி­யும் அற­நி­லை­யத்­துறை கட்­டுப்­பா­டு­களை வெளி­யிட்­டுள்­ளது.

தஞ்சை மாவட்­டத்­தில் மட்­டும் நேற்று மேலும் 17 பள்ளி, கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு இக்­கி­ரு­மிப் பர­வல் உறுதி செய்­யப்­பட்டு உள்­ளது. இத­னால், மாவட்­டத்­தில் மொத்த பாதிப்பு 185ஆக உயர்ந்­துள்­ளது.

ஏற்­கெ­னவே தஞ்சை மாவட்­டத்­தில் உள்ள 11 பள்­ளி­களில் 168 பேருக்கு கொரோனா உறு­தி­யான நிலை­யில், மேலும் 12 பேருக்கு இப்­பா­திப்பு உறு­தி­யா­கி­யி­ருப்­பது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

மாநி­லத்­தில் தொடா்ந்து மூன்­றா­வது நாளாக இந்த கிருமி பாதிப்பு ஆயி­ரத்­தைக் கடந்­துள்­ளது.

அதன்­படி கடந்த 24 மணி நேரத்­தில் மாநி­லம் முழு­வ­தும் 1,289 பேருக்கு கிரு­மித்­தொற்று உறு­தி­யா­னது. அடுத்த சில நாள்­களில் இந்த எண்­ணிக்கை இரு மடங்­கா­கும் என அஞ்­சப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, இந்த கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கும் வகை­யில், பள்­ளி­க­ளுக்கு விடுப்பு அளித்­தது போல கல்­லுா­ரி­க­ளுக்­கும் விடு­முறை அளிக்க தமி­ழக அரசு பரி­சீ­லித்து வரு­கிறது. இதற்­கான அறி­விப்பு ஓரிரு நாட்­களில் வெளி­யி­டப்­பட உள்­ளது.