சிகிச்சை பெறும் நடிகர் கார்த்திக்

சிகிச்சை பெறும் நடிகர் கார்த்திக்

1 mins read
20c608d5-0daf-4c6f-b70b-26864b37f074
-

சென்னை: மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவன ரும் நடிகருமான கார்த்திக் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக அவர் தயாராகிக்கொண்டிருந்த போது, திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடி யாக, சென்னை அடையாரில் உள்ள மலர் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட கார்த்திக்குக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு கிருமி பாதிப்பு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.