சென்னை: தேர்தல் நெருங் கும் வேளையில், மநீம கட்சி வேட்பாளர்கள் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப் பட்டு வருவது கட்சித் தலைவர் கமல்ஹாசனை அதிர வைத்துள்ளது.
மநீம சார்பில் இத்தேர்த லில் 133 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளதை அடுத்து, சென்னை அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட இருந்த மநீம கட்சியின் துணைத் தலைவரும் கலாமின் உதவியாளருமான பொன்ராஜுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
முன்னதாக வேளச்சேரி மநீம வேட்பாளர் சந்தோஷ்பாபு வுக்கு இத்தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகிறார்.

