கமல் வாகனத்தில் சோதனை: ஊழல் செய்தால் அமைச்சர்களுக்கு கைவிலங்கு என்கிறார்

கமல் வாகனத்தில் சோதனை: ஊழல் செய்தால் அமைச்சர்களுக்கு கைவிலங்கு என்கிறார்

2 mins read
82aeb513-3f38-47ce-b5db-329af3bc55e2
தஞ்சையில் கமல்ஹாசனின் பிரசார வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். படம்: ஊடகம் -

தஞ்சை: மக்­கள் நீதி மய்­யம் கட்சி­யின் வேட்­பா­ளர்­கள் செல்­லும் இட­மெல்­லாம் மக்­க­ளின் வர­வேற்பு அமோ­க­மாக இருப்­ப­தாக அக்­கட்­சித் தலை­வர் கமல்­ஹா­சன் தெரி­வித்­துள்­ளார்.

தங்­கள் கட்சி ஆட்சி அமைத்­தால் ஊழல் குற்­றச்­சாட்­டில் சிக்­கும் அமைச்­சர்­கள் உட­ன­டி­யாக கைது செய்­யப்­ப­டு­வார்­கள் என அவர் தேர்­தல் பிர­சா­ரத்­தின்­போது குறிப்­பிட்­டார்.

நேற்று முன்­தி­னம் நாகை மாவட்­டத்­தில் பிர­சா­ரம் மேற்­கொண்­டார் கமல்­ஹா­சன். பின்­னர் தஞ்­சா­வூர் புறப்­பட்­டுச் சென்­றார். அப்­போது தஞ்­சா­வூர் பழைய மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கம் அருகே அவர் சென்ற வாக­னத்தை தேர்­தல் பறக்­கும் படை­யி­னர் தடுத்­த­னர்.

இதை­ய­டுத்து துணை ராணு­வப் படை­யி­ன­ரும் போலி­சா­ரும் வாக­னத்தை சோத­னை­யிட்­ட­னர். இதில் பணம் உள்­ளிட்ட பொருள்­கள் எது­வும் கைப்­பற்­றப்­ப­ட­வில்லை.

இதை­ய­டுத்து அவ­ரது வாக­னம் தொடர்ந்து செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டது. இதே­போல் மேலும் ஒரு­முறை கமல்­ஹா­ச­னின் வாக­னம் சோத­னை­யி­டப்­பட்­டது. இது­கு­றித்து மக்­கள் நீதி மய்­யம் கட்­சி­யி­னர் ஆட்­சே­பம் ஏதும் தெரி­விக்­க­வில்லை.

முன்­ன­தாக நாகை­யில் நடை­பெற்ற பிர­சா­ரக் கூட்­டத்­தில் பேசிய அவர் பணத்­துக்­காக வாக்­கு­களை விற்­கக் கூடாது என வேண்­டு­கோள் விடுத்­தார்.

"எங்­கள் ஆட்­சி­யில் அமைச்­சர்­கள் கொள்­ளை­ய­டித்­தால் கைது செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்கு கைவி­லங்கு போடப்­படும். கஜா புய­லின்­போது நான் சீர்­கு­லைந்து கிடந்த இடங்­க­ளுக்கு எல்­லாம் நடந்து வந்­தேன். மக்­கள் எங்­களை வர­வேற்­றார்­கள்.

"அப்­போது ஆட்­சி­யில் இருப்­ப­வர்­கள் ஹெலி­காப்­ட­ரில் வந்­தார்­கள். அவர்­களை அடித்து விரட்­டி­னார்­கள். ஆனால் நாங்­கள் இப்­போது ஹெலி­காப்­ட­ரில் வந்­தா­லும் மக்­கள் எங்­களை வர­வேற்­கி­றார்­கள்," என்­றார் கமல்­ஹா­சன்.

தமி­ழக மக்­கள் தங்­க­ளது எதிர்­கால சந்­த­தி­க­ளைப் பற்றி யோசித்து நேர்­மை­யான கட்­சிக்கு வாக்­க­ளிக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­திய அவர், மக்­கள் ஆத­ரவு அளித்­தால்­தான் தம்­மால் தேர்­த­லில் வெற்றி பெற்று வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற இய­லும் என்­றார்.

மக்­கள் நீதி மய்­யத்தை பொறுத்­த­வரை அதன் உறுப்­பி­னர்­க­ளுக்கு அர­சி­யல் என்­பது தொழில் கிடை­யாது என்று குறிப்­பிட்ட அவர், அர­சி­யல் ஈடு­பாட்டை ஒரு கட­மை­யாக கரு­து­வ­தாக தெரி­வித்­தார்.

"நாங்­கள் ஆட்­சிக்கு வந்­தால் 'சேவை பெறும் உரிமை' என்ற புதுச்­சட்­டம் கொண்டு வரப்­படும். சேவை பெறும் உரிமை உங்­க­ளு­டை­யது. அதை வழங்­கும் முதல் கட்சி மக்­கள் நீதி மய்­யம்.

"ஊழல் செய்­ப­வர்­களை தைரி­ய­மாக நீக்­கு­வ­தற்­கும் தண்­டிப்­ப­தற்­கு­மான எல்லா ஏற்­பா­டு­க­ளை­யும் செய்­வோம்," என்­றார் கமல்­ஹா­சன்.

தமது பிரசாரத்தின்போது அவர் திமுகவையும் அதிமுகவையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.