அதிகரிக்கும் கிருமித்தொற்று: அதிகாரிகள் தீவிர ஆலோசனை

அதிகரிக்கும் கிருமித்தொற்று: அதிகாரிகள் தீவிர ஆலோசனை

2 mins read
b37b30d3-6278-4658-94e9-5d8a16fe3bcd
-

10 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நிறுத்தம்

புது­டெல்லி: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்­தொற்று மீண்­டும் அதி­க­ரிக்க தொடங்கி உள்­ளது. இதை­ய­டுத்து தொற்­றுப்­ப­ர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வது குறித்து நேற்று தமி­ழக அரசு ஆலோ­சனை மேற்­கொண்­டது.

தலை­மைச் செய­ல­கத்­தில் நடை­பெற்ற ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் பங்­கேற்ற தலை­மைச் செய­லர் ராஜீவ் ரஞ்­சன், மருத்­துவ நிபு­ணர்­கள், சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­க­ளு­டன் கலந்­தா­லோ­ச­னை­யில் ஈடு­பட்­டார்.

அப்­போது நோய் தடுப்­புப் பணி, தடுப்­பூசி போடும் பணியை மேலும் வேகப்­ப­டுத்­து­வது குறித்­தும் தொற்­றுப்­ப­ர­வ­லைத் தடுக்க கூடு­தல் கட்­டுப்­பா­டு­கள் விதிக்க வேண்­டுமா என்­பது குறித்­தும் ஆலோ­சிக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது.

இக்­கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்ட முடி­வு­கள் எடுக்­கப்­பட்­ட­தா­க­வும் அவை விரை­வில் செயல்­ப­டுத்­தப்­பட உள்­ள­தா­க­வும் சுகா­தா­ரத்­துறை வட்­டா­ரத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தில் தற்­போது அன்­றா­டம் பதி­வா­கும் புதிய தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை ஆயி­ரத்­தைக் கடந்­துள்­ளது.

இந்­நி­லை­யில் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெற இருப்­ப­தால் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்­ள­தாக அச்­சம் எழுந்­துள்­ளது. எனவே பீகார் மாநி­லத்­தில் தேர்­த­லை­யொட்டி கடைப்­பி­டிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­களை தமி­ழ­கத்­தி­லும் அமல்­ப­டுத்­து­வது குறித்து அதி­கா­ரி­கள் ஆலோ­சித்து வரு­கின்­ற­னர்.

தமி­ழ­கத்­தில் கடந்த சில தினங்­க­ளாக சென்னை, செங்­கல்­பட்டு, கோவை, திரு­வள்­ளூர், தஞ்­சா­வூர், காஞ்­சி­பு­ரம், திருப்­பூர், சேலம், மதுரை, திரு­வா­ரூர் ஆகிய 10 மாவட்­டங்­களில் நோய்த் தொற்று அதி­க­ரித்து வரு­வ­தாக தலை­மைச் செய­லா­ளர் ராஜீவ் ரஞ்­சன் தெரி­வித்­துள்­ளார்.

இதைக் கருத்­தில் கொண்டு அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் கொரோனா பரி­சோ­த­னையை தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ள­தாக அவர் கூறி­யுள்­ளார்.

மாநி­லம் முழு­வ­தும் இது­வரை 2.1 மில்­லி­யன் பேர் தடுப்­பூ­சியை போட்­டுக் கொண்­டுள்­ள­தாக சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது. மேலும் தமி­ழ­கத்­தில் அனைத்து கல்­லூ­ரி­க­ளி­லும் நேரடி வகுப்­பு­கள் நிறுத்தப்படுவதாகவும் அறி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே தஞ்­சை­யில் மேலும் ஐந்து கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு கொரோனா கிரு­மித்­தொற்று இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அங்கு இது­வரை 180 பள்ளி மாண­வர்­கள், 13 கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு தொற்று உறு­தி­யாகி உள்­ளது.

திண்­டுக்­கல்­லில் ஒரே குடும்­பத்­தில் 5 பேர் உள்­பட 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக மாவட்ட சுகா­தார அதி­காரி தெரி­வித்­துள்­ளார்.