விழுப்புரம்: பாமக இளையரணி தலைவர் அன்புமணிக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுக்கூட்டம் ஒன்றில் வன்முறை, கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக அன்புமணி மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
இந்த வழக்கு விசா ரணைக்கு நேரில் முன்னிலை ஆகாததால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

