கன்னியாகுமரியில் காங்கிரஸ், பாஜக நேரடிப் போட்டி

கன்னியாகுமரியில் காங்கிரஸ், பாஜக நேரடிப் போட்டி

1 mins read
63ffcde7-a238-4dec-b2e5-0755f9015241
-

சென்னை: ஏப்­ரல் 6ஆம் தேதி நடை­பெற உள்ள கன்­னி­யா­கு­மரி நாடா­ளு­மன்­றத் தொகு­திக்­கான இடைத்­தேர்­த­லில் இம்­முறை தேசிய கட்­சி­க­ளான காங்­கி­ர­சும் பாஜ­க­வும் நேருக்கு நேர் மோது­கின்­றன.

இம்­முறை இத்­தொ­கு­தி­யில் 12 பேர் களம் காண்­கி­றார்­கள். காங்­கி­ரஸ் கட்சியைச் சேர்ந்த இத்­தொ­குதி எம்பி வசந்­த­கு­மார் மர­ணம் அடைந்­ததை அடுத்து இத்­தொ­கு­தி­யில் இடைத்­தேர்­தல் நடை­பெ­று­கிறது.

காங்­கி­ரஸ் கட்சி சார்­பில் மறைந்த வசந்­த­கு­மா­ரின் மகன் விஜய் வசந்த் போட்­டி­யி­டு­கி­றார். அதி­முக கூட்­ட­ணி­யில் இத்­தொ­குதி பாஜ­க­வுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

அக்­கட்சி ஏற்­கெ­னவே இதே தொகு­தி­யில் போட்­டி­யிட்டு தோல்வி அடைந்த பொன்.ராதா­கி­ருஷ்­ணன் மீண்­டும் கள­மி­றங்­கு­கி­றார்.

இத்­தொ­கு­திக்­கான இறுதி வேட்­பா­ளர் பட்­டி­யல் வெளி­யா­கி­யுள்­ளது. அதன்­படி 12 பேர் போட்­டி­யி­டு­கி­றார்­கள். எனி­னும், காங்­கி­ரஸ், பாஜக இடை­யே­தான் நேர­டிப் போட்டி நில­வு­கிறது.

அதே­ச­ம­யம் மாநி­லக் கட்­சி­களான மக்­கள் நீதி மய்­யம், நாம் தமி­ழர் கட்­சி­யும் வேட்­பா­ளர்­க­ளைக் கள­மி­றக்கி இருப்­ப­தால் தேசிய கட்­சி­கள் கடும் போட்­டியை எதிர்­கொண்­டுள்­ள­தாக அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர்.