புதுடெல்லி: ஐநா மனித உரிமைப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து ஐநா பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது நேற்று வாக்கெடுப்பு நடந்தது. அதில் தீர்மானத்தை ஆதரித்து 22, எதிராக 11 நாடுகள் வாக்களித்தன.
இந்தியா வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை. தீர்மானம் நிறைவேறி இருப்பது இலங்கைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

