அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி நஷ்டம்

அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி நஷ்டம்

1 mins read
98652dab-0f82-4697-a90e-0879aa0af7d6
-

மயி­லா­டு­துறை: தமி­ழ­கத்­தில் ஏப்­ரல் 6ஆம் தேதி ஒரே கட்­ட­மாக சட்­ட­சபை தேர்­தல் நடை­பெற உள்­ளது. தேர்­த­லில் பதி­வா­கும் வாக்­கு­கள் மே 2ஆம் தேதி எண்­ணப்­பட்டு அன்றே முடி­வு­கள் அறி­விக்­கப்­ப­டு­கிறது.

தேர்­தல் களத்­தில் அதி­முக கூட்­டணி, திமுக கூட்­டணி, அம­முக கூட்­டணி, மக்­கள் நீதி மய்­யம் கூட்­டணி, நாம் தமி­ழர் கட்சி என்று ஐந்து முனை போட்டி நில­வு­கிறது.

சுயேச்சை வேட்­பா­ளர்­கள் பல­ரும் போட்டி களத்­தில் குதித்­துள்­ள­னர். தேர்­தல் தேதி நெருங்கி வரு­வ­தால் அர­சி­யல் கட்­சி­கள் தீவிர தேர்­தல் பரப்­பு­ரை­யில் ஈடு­பட்டு வரு­கின்­றன.

நடி­கர் கமல்­ஹா­சன் தலை­மை­யி­லான மக்­கள் நீதி மய்­யம் கட்சி, முதன்­மு­றை­யா­கத் தமி­ழக சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் போட்­டி­யி­டு­கிறது.

தி.மு.க, அ.தி.மு.க அணி­க­ளுக்கு மாற்­றாக மூன்­றா­வது அணி­யா­கக் கள­மி­றங்­கும் ம.நீ.ம-வுக்­கா­கத் தேர்­தல் பரப்­புரை செய்து வரு­கி­றார் கமல்­ஹா­சன்.

இந்­நி­லை­யில், மயி­லா­டு­துறை மாவட்­டத்­தில் உள்ள தொகு­தி­களில் போட்­டி­யி­டும் மக்­கள் நீதி மய்­யம் மற்­றும் கூட்­டணி கட்­சி­க­ளின் வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து அம்­மா­வட்­டத்­தில் மக்­கள் நீதி மய்­யம் தலை­வர் கமல்­ஹா­சன் நேற்று பிர­சா­ரத்­தில் ஈடு­பட்டார்.

மயி­லா­டு­துறை சின்ன கடைத் தெரு­வில் வேட்­பா­ளர் ரவிச்­சந்­தி­ர­னுக்கு ஆத­ர­வா­கப் பரப்­புரை செய்த கமல் பேசு­கை­யில், "நடிப்பை விட்டு அர­சி­ய­லுக்கு வந்­துள்­ள­தால் எனக்கு 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது.

"ஆனால், அதைப்­பற்றி நான் பொருட்­ப­டுத்­த­வில்லை. மக்­க­ளின் நலன் ஒன்றை மட்­டுமே மனத்­தில் கொண்டு அர­சி­ய­லுக்கு வந்­துள்­ளேன்," என்­றார்.