அஞ்சல் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடங்கப்படும்

அஞ்சல் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடங்கப்படும்

1 mins read
0973e442-f61a-4713-aece-8d7a208e6df4
-

சென்னை: அஞ்சல் வாக்குகள்

சேகரிக்கும் பணி நாளை முதல் தொடங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் அஞ்சல் வாக்குகளை

சேகரிக்க 70 வாகனங்கள் உள்ளன. ஒரு வாகனத்தில் இரண்டு வாக்குப்பதிவு அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள், ஒளிப்பதிவாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வரும் 31ம் தேதிக்குள் அஞ்சல் மூலம் அளிக்கப்படும் வாக்குகளைச் சேகரிக்கும் பணி முடிவடையும். சென்னை மாவட்டத்தில்

மட்டும் இதுவரை 7,300 பேர் அஞ்சல் வாக்கு கோரி

விண்ணப்பித்துள்ளனர்.

சென்னையில் 1.20 லட்சம் பேருக்கு விண்ணப்பங்கள்

வழங்கப்பட்டுள்ளன. 12,000 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று கூறினார். தேர்தல் சட்டத்தின்படி, தேர்தலில் வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்குச் சாவடியிலும் அஞ்சல் வாக்களிக்கத் தகுதிபெற்றோர் அஞ்சல் மூலமாகவோ வாக்களிக்கலாம்.