கோவை: ஒரே நாளில் 146 பேருக்குத் தொற்று

கோவை: ஒரே நாளில் 146 பேருக்குத் தொற்று

1 mins read
cb7ed188-002a-43cd-8e00-32e0d2ef6407
-

கோயம்­புத்­தூர்: கோவை மாவட்­டத்­தில் கடந்த ஐந்து நாட்­க­ளாக நூற்­றுக்­கும் அதி­க­மா­னோ­ருக்கு கொரோனா பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. நேற்று ஒரே நாளில் 146 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்ள நிலை­யில், மாவட்ட நிர்­வா­கம் தொற்று பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கையை தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்­தச் சூழ­லில், கோயம்­புத்­தூர் பீள­மேடு பகு­தி­யில் உள்ள சென்ட்­ரல் பேங்க் ஆப் இந்­தியா வங்­கி­யில் பணி­பு­ரி­யும் ஊழி­யர்­கள் நான்கு பேருக்கு அடுத்­த­டுத்து தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இத­னால் பாது­காப்­புக் கருதி அந்த வங்­கிக் கிளை தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டுள்­ளது. அவ­ச­ரத் தேவைக்­காக வங்­கிக்கு வரு­ப­வர்­கள் அரு­கில் உள்ள ஆவா­ரம்­பா­ளை­யம் மற்­றும் காளப்­பட்டி கிளை­களை பயன்­ப­டுத்­திக்­கொள்ள சென்ட்­ரல் பேங்க் ஆப் இந்­தியா நிர்­வா­கம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது. தமி­ழ­கத்­தில் தின­சரி கொரோனா பாதிப்பு எண்­ணிக்கை 1,500ஐ நெருங்­கி­யுள்­ளது.