'அவர்களிடம் பணம் வாங்கி எங்களுக்கு வாக்களியுங்கள்'

'அவர்களிடம் பணம் வாங்கி எங்களுக்கு வாக்களியுங்கள்'

1 mins read
84a431eb-9874-4471-82c0-90e111234bf8
-

விழுப்­பு­ரம்: "எடப்­பாடி பழ­னி­சாமி பல்­லியோ, பாம்போ அல்ல பச்­சோந்தி என்று அம­முக பொதுச் செய­லா­ளர் டிடிவி தின­க­ரன் (படம்), தமி­ழக முதல்­வரை விமர்­ச­னம் செய்­துள்­ளார்.

விழுப்­பு­ரத்­தில் நேற்று இரவு தேர்­தல் பரப்­புரை மேற்­கொண்­டார். அப்­போது அவர் பேசும்­போது, ''எடப்­பாடி பழ­னி­சாமி பொய்­க­ளைக் கூறி வாக்­குச் சேக­ரித்து வரு­கி­றார்.

"அவர் நமக்­குத் துரோ­கம் செய்­து­விட்­டார் என்று ஸ்டா­லின் வக்­கா­லத்து வாங்­கு­கி­றார். ஆடு நனை­கி­றதே என்று ஓநாய் அழு­த­தாம்.

எடப்­பாடி பழ­னி­சாமி சொல்­கி­றார், நான் யார் காலி­லும் விழ­வில்­லையே? ஊர்ந்து செல்ல நான் என்ன பல்­லியா, பாம்பா? என்று.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் டிடிவி தினகரன், "இல்லை அவர் பச்­சோந்தி. சரியா, இல்­லையா?," என்று கேட்டுள்ளார்.

"நாம் அதி­மு­க­வைக் கேட்­ப­தை­யெல்­லாம் திமு­க­வி­னர் கேட்­கி­றார்­கள். நாம் திமு­கவை விமர்­சித்­துப் பேசு­வதை எடப்­பாடி பழ­னி­சாமி கேட்­கி­றார். அந்த இரண்டு கட்­சி­க­ளுக்­கும் பேச வேறு விஷ­யம் இல்லை.

"இரண்டு கட்­சி­க­ளை­யும் விமர்­சித்­துப் பேசும் ஒரே தகுதி அம­மு­க­வுக்­குத்­தான் உண்டு.

"நாளாக நாளாக அவர்­களை ஒரு­வி­தப் பயம் சூழ்ந்­து­கொண்­டது. ஆர்.கே.நகர் போல ரூ.6,000 ரூபாய் கூடக் கொடுப்­பார்­கள்.

"எல்லா மக்­க­ளி­ட­மும் சொல்­லி­வி­டுங்­கள், அது உங்­கள் பணம்­தான். 6,000 ரூபாயை வாங்­கிக்­கொண்டு கதையை முடித்துவிடுங்­கள் ஆர்.கே.நகர் போல,'' என்று டிடிவி தின­க­ரன் தெரி­வித்­தார்.