இலங்கைக்கு எதிராக பாஜக அரசு வாக்களிக்கவில்லை; அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் தண்டிக்க வேண்டும்

இலங்கைக்கு எதிராக பாஜக அரசு வாக்களிக்கவில்லை; அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் தண்டிக்க வேண்டும்

2 mins read
1aaafc5d-b5b4-4f14-bca9-3b0dbec0f08b
-

புது­டெல்லி: ஐக்­கிய நாடு­கள் மன்­றத்­தின் மனித உரி­மை­கள் ஆணை­யத்­தில் இலங்­கைக்கு எதி­ரா­கக் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­கா­மல் இந்­தியா புறக்­க­ணித்த செய­லுக்கு அதி­முக, பாஜக கூட்­ட­ணியை மக்­கள் தேர்­த­லில் தண்­டிக்க வேண்­டும் என்று காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் ப.சிதம்­ப­ரம் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

இலங்­கை­யில் விடு­த­லைப் புலி­க­ளுக்­கும், ராணு­வத்­துக்­கும் இடையே நடந்த இறு­திக்­கட்­டப் போரில் ஈழத்­த­மி­ழர்­கள் லட்­சக்­கணக்­கா­னோர் கொன்று குவிக்­கப்­பட்­ட­னர். ஆயி­ரக்­க­ணக்­கான மக்­க­ளைக் காண­வில்லை.

இலங்கை ராணு­வம் தமி­ழர்­கள் மீது இன அழிப்பு நட­வ­டிக்­கையைச் செய்து, மனித உரி­மை­கள் மீற­லில் ஈடு­பட்­டது தொடர்­பாக அந்­நாட்­டின் மீது அனைத்துலக மனித உரி­மை­கள் ஆணை­யம் போர்க் குற்ற விசா­ரணை நடத்த வேண்­டும் என்று பிரிட்­டன், கனடா உள்­ளிட்ட 6 நாடு­கள் ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யத்­தில் தீர்­மா­னம் கொண்­டு­வந்­தன.

ஜெனீ­வா­வில் உள்ள ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யத்­தில் நேற்று முன்தினம் நடந்த வாக்­கெடுப்­பில் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக 22 நாடு­களும், எதி­ராக 11 நாடு­களும் வாக்­க­ளித்­தன.

இந்­தத் தீர்­மா­னத்­தில் வாக்­க­ளிக்­கா­மல் இந்­தியா உள்­ளிட்ட 14 நாட்­கள் புறக்கணித்தன.

இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னத்­துக்கு எதி­ராக வாக்­க­ளிக்­கா­மல் இந்­தியா புறக்­க­ணித்­த­மைக்கு காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் ப.சிதம்­ப­ரம் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.

ப.சிதம்­ப­ரம் டுவிட்­ட­ரில் பதி­விட்ட கருத்­தில், "ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யத்­தில் இலங்­கைக்கு எதி­ரா­கக் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­கா­மல் இந்­தியா ஒதுங்­கிக்கொண்­டது.

இது தமிழ் மக்­க­ளின் விருப்­பம், ஒரு­மித்த உணர்­வு­க­ளுக்­குச் செய்­யப்­பட்ட துரோ­கம். தமி­ழர்­க­ளின் நல­னுக்கு எதி­ரா­கச் செயல்­படும் அதி­முக-பாஜக கூட்­ட­ணியைத் தமி­ழக மக்­கள் தேர்­த­லில் தண்­டிக்க வேண்­டும்.

ஐ.நா. மனித உரிமை ஆணை­யத்­தில் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக இந்­தியா வாக்­க­ளிக்­கா­மல் ஒதுங்­கிக் கொள்ளவேண்­டும் என்று இந்­தி­யப் பிர­தி­நி­தியை வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­சர் உத்­த­ர­விட்­டி­ருந்­தால், தமி­ழர்­க­ளின் நல­னுக்கு எதி­ரா­கச் செயல்­பட்ட அவ­ரைப் பதவி நீக்­கம் செய்ய வேண்­டும்,'' என்று தெரி­வித்­துள்­ளார்.