கல்பாக்கம்: ராஜபக்சேயைக் காப்பாற்றுவதற்காக ஐநா மனித உரிமைக் கழகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்கு அளிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளதாக தொல்.திருமாவளவன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் படுகொலைக்குக் காரணமான ராஜபக்சேயை அனைத்துலகக் குற்றப் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்தக்கூடிய வகையில், அனைத்துலகக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதற்கு ஆதரவாக தீர்மானத்திற்கு வாக்களித்திருக்க வேண்டும். ஆனால், அவரை காப்பாற்றுவதற்காக இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்கு செலுத்தவில்லை," என்றார் திருமாளவன்.

