‘வெற்றிபெற வைத்தால் நிலவுக்குச் சுற்றுலா!’

சென்னை: சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்­காக அர­சி­யல் கட்­சி­கள் ஏரா­ள­மான வாக்­கு­று­தி­களை அளித்­துள்­ளன.

ஆளும் அ.தி.மு.க.வும், எதிர்க்­கட்­சி­யான தி.மு.க.வும் பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்­கி­யுள்­ளன. இதை செய்ய முடி­யுமா? என்ற விமர்­ச­னங்­களும்; தங்­கள் வாக்­கு­று­தி­களை காப்பி அடித்து விட்­டார்­கள் என்ற குற்­றச்­சாட்­டு­களும் பரப்புரையில் வைக்­கப்­ப­டு­கின்­றன.

இது­த­விர, மக்­கள் நீதி மய்­யம், நாம் தமி­ழர், அ.ம.மு.க. கட்­சி­களும் ஏரா­ள­மான வாக்­கு­று­தி­களை அளித்­துள்­ளன.

இது மட்­டு­மல்ல, கட்சி வேட்­பா­ளர்­களும், சுயேச்சை­களும் மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­களை அளித்து வரு­கி­றார்­கள்.

அர­சி­யல் கட்­சி­க­ளின் வாக்­கு­று­தி­களே நிறை­வே­றுமா என்ற கேள்வி எழுந்­துள்ள நிலை­யில், சுயேச்சை வேட்­பா­ளர் ஒரு­வர் அள்ளிவிட்­டுள்ள வாக்­கு­று­தி­கள், அர­சி­யல் கட்­சி­களை அதிர வைத்­துள்­ளன.

மதுரை தெற்கு தொகுதி சுயேச்சை வேட்­பா­ளர் ஒரு­வர் 35 வாக்­கு­று­தி­களை அளித்­துள்­ளார். அனை­வ­ரை­யும் அச­ர­வைக்­கும் வாக்­கு­று­தி­களில் சில...

* தொகுதி மக்­கள் அனை­வ­ருக்­கும் 'ஐஃபோன்' வழங்­கப்­படும்.

* உலக வெப்­ப­ம­யம் ஆவ­தால் தொகுதி சில்­லென இருக்க 300 அடி உயர செயற்கைப் பனி­மலை உரு­வாக்­கப்­படும்.

* விடு­முறை நாளில் மக்­கள் பொழு­து­போக்க செயற்கைக் கடல் உரு­வாக்­கப்­படும்.

* தேர்ந்­தெ­டுக்­கப்­படும் 10 பேர் சுற்­றுலாப் பய­ண­மாக 100 நாட்­கள் நில­வுக்கு அழைத்துச் செல்­லப்­படு­வார்­கள்.

* தொகு­தி­யில் ராக்­கெட் ஏவு­தளம் அமைக்­கப்­படும்.

* இளை­ஞர்­கள் தொழில் தொடங்க ஆளுக்கு ரூ.1 கோடி மானி­யம்.

* போக்­கு­வ­ரத்து நெரி­சலைக் குறைக்க கால்­வாய்­கள் வெட்­டப்­படும். இதில் பய­ணம் செய்ய வீட்­டுக்கு ஒரு படகு வழங்­கப்­படும்.

இப்­படி வாக்­கு­று­தி­கள் தொடர்­கின்­றன. கற்­ப­னைக்குக் கூட எட்­டாத இந்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யாது என்­பது அனை­வ­ருக்­கும் தெரி­யும்.

என்­றா­லும் இந்தக் கற்­பனைத் தில­கம் மாறுபட்ட வாக்­கு­று­தி­களை அளித்து அனை­வ­ரை­யும் தன்னை திரும்­பிப் பார்க்க வைத்து விட்­டார்.

தேர்­த­லில் வெற்­றி­பெற எதை­யும் செய்­ய­லாம் என்று எல்லை மீறி வாக்­கு­று­தி­களை அளித்­து வருகின்றன அரசியல் கட்சிகள்.

அந்தக் கட்­சி­க­ளின் வாக்­கு­று­தி­களை மறை­மு­க­மாகக் கிண்­டல் செய்­யவே இவர் இந்த வாக்­கு­று­தி­களை அளித்­துள்­ளார் என்று அர­சி­யல் விமர்­ச­கர்­கள் கருத்து தெரி­வித்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!