தொடர்கிறது தபால் வாக்களிப்பு

தொடர்கிறது தபால் வாக்களிப்பு

2 mins read
794f5e68-7c93-44e6-946e-1cb87d32317b
-

வேலூர்: தமி­ழ­கத்­தில் 80 வய­துக்கு மேற்­பட்ட முதி­யோர், மாற்­றுத்திற­னா­ளி­கள், கொரோனா கிரு­மித்தொற்­றால் பாதிக்­கப்­பட்டு இருப்­பவர்­க­ளி­டம் இருந்து தபால் வாக்­கு­க­ளைச் சேக­ரிக்­கும் பணி நேற்­று­மு­தல் தொடங்­கி­ய­தாக மாவட்ட தேர்­தல் அலு­வ­ல­ரும் மாந­க­ராட்சி ஆணையரு­மான கோ.பிர­காஷ் தெரிவித்­தார்.

இப்­பணி வரும் 31ஆம் ேததி வரை ஏழு நாள்­கள் தொடர உள்ள தாக­வும் அவர் மேலும் கூறி­னார்.

இதே­போல், வேலூர் மாவட்­டத் திலும் தபால் மூலம் வாக்­க­ளிக்க நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டுள்ள தாக அதி­கா­ரி­கள் தரப்­பில் தெரி விக்­கப்­பட்­டுள்­ளது.

வேலூர் மாவட்­டத்­தில் 80 வய­துக்கு மேற்­பட்ட மூத்த குடிமக்­கள் 24,485 பேரும் மாற்­றுத் திற­னா­ளி­கள் 7,124 பேரும் உள்ளதாக­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பொது­வாக தேர்­தல் சம­யத்­தில் வாக்­க­ளிப்­பின்­போது வய­தான முதி­ய­வர்­க­ளை­யும் உடல் ஊன­முற்ற வர்­க­ளை­யும் சமூக நல ஆர்­வ­லர்­களோ அல்­லது அவர்­க­ளது உற­வி­னர்­களோ வாக்­க­ளிப்பு மையத்­துக்கு தூக்கி வந்து வாக்­க­ளிக்­கச் செய்­வர். ஆனால், இம்­முறை இந்­திய தேர்­தல் ஆணை­யம் முதி­யோர்­கள் தபால் வாக்­கு­கள் மூலம் வாக்க ளிக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

செய்­தி­யா­ளர்களி­டம் கோ.பிர­காஷ் கூறு­கை­யில், "வாக்­க­ளிப்பு மையங்­க­ளுக்கு முதி­யோர்­களால் நேர­டி­யாக வந்து வாக்­க­ளிக்­க­முடி­யாத சூழ­லில், அவர்களது வீடு­க­ளுக்கே தேர்­தல் அலு­வ­லர்­கள் நேரில் சென்று வாக்­கு­களைப் பதிவு செய்து, அதனை காணொ­ளி­யாக வும் எடுத்து, பெறப்­பட்ட வாக்­கு­களை தேர்­தல் அதி­கா­ரி­யிடம் ஒப்­ப­டைப்­பார்கள்," என்றார்.

சட்டமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குகளை வீடுகளுக்கே நேரடியாகச் சென்று பெறும் பணி நேற்று தமிழகம் எங்கும் பரவ லாகத் தொடங்கியது. இப்பணி இம்மாதக் கடைசி வரை நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான பொருள்களை அலுவலர்களிடம் வழங்குகிறார் மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ். படம்: ஊடகம்