சென்னை: தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் அடுத்த சில நாள்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் பதிவாகும் வாக்கு கள் மே மாதம் 2ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
இந்நிலையில், இத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியில் அமரப்போவது யார் என்பது குறித்த தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் சி-வோட் டர்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, தமிழகத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெறும் எனவும் இந்தக் கூட்டணி யின் வெற்றிவாய்ப்பு முன்பைவிடவும் தற்போது உயர்ந்துள்ளதாகவும் முடிவுகள் தெரிவித்துள்ளன.
அண்மையில் நடந்த கருத்துக் கணிப்பில் 158 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்ட திமுக கூட்டணி, இப்ேபாதைய கணிப்பின் படி 177 இடங்களைக் கைப்பற்றும் என கூறப்படுகிறது.
அதேநேரத்தில் 65 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்ட அதிமுக கூட்டணி, இப்போது 49 தொகுதிகளை மட்டுமே பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தின கரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவையும் தலா மூன்று இடங்களில் வெற்றிபெறும் என தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணிக்கு 46% வாக்குகளும் அதிமுக கூட்டணிக்கு 34.6% வாக்குகளும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 4.4%; அமமுகவுக்கு 3.6%; மற்றவர்களுக்கு 11.4% வாக்குகளும் கிடைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக தலைமையிலான கூட்டணி 21 இடங்களைக் கைப்பற்றி பெரும் வெற்றியை ஈட்டும் என்றும் காங்கிரஸ் - திமுக கூட்டணி வெறும் ஒன்பது இடங்களை மட்டுமே பெறும் எனவும் தெரிகிறது.
அசாம்: அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி 69 இடங்களையும் காங்கிரஸ் 56 இடங்களையும் பெறும் என கணிப்பு கூறுகிறது.
கேரளா: கேரளாவில் போட்டி சற்று அதிகரித்துள்ளது. முன்பு 82 இடங்களைப் பெற்று ஆட்சி யமைக்கும் என கூறப்பட்ட இடது ஜனநாயக முன்னணி தற்போது 77 இடங்களை மட்டுமே பெறும் எனவும் காங்கிரஸ் 62 இடங்களை வெல்லும் எனவும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
மேற்குவங்கம்: மேற்கு வங்க மாநிலத்தில் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 160 இடங்களை வெல்லும் எனவும் பாஜக 112 இடங்களில் வெல்லும் எனவும் புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
கணிப்புகள் ஊக்கம் தந்தாலும் வாக்குகளே வெற்றியைத் தரும். முழு வெற்றியை அறுவடை செய்வதற்கு எப்போதும்போல் கவனம் சிதறாமல், கருத்தொன்றி உழைத்திடுங்கள்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

