விஜயகாந்த் மெளன பிரசாரம்: உருகிப்போன தொண்டர்கள்

விஜயகாந்த் மெளன பிரசாரம்: உருகிப்போன தொண்டர்கள்

1 mins read
7e69acb0-9c47-4515-952a-bfef549fd67c
-

கும்­மி­டிப்­பூண்டி: உடல்­நிலை சரி யில்­லாத நிலை­யில், நீண்ட நாட்­க­ளுக்­குப் பின் தேமு­திக தலை­வர் விஜ­ய­காந்த் திறந்த வேனில் நின்­ற­படி கையை மட்­டும் அசைத்து வாக்கு சேக­ரித்­தார். அவரால் எது­வும் பேச­மு­டி­யாத நிலையில், மௌனமாக கடந்து சென்ற விஜ­ய­காந்தை பார்த்து அவ­ரது தொண்­டர்­கள் 'கேப்­டன்... கேப்­டன்...' என உருக்­க­மாக அழைத்து முழக்­க­மிட்­ட­னர்.

விஜ­ய­காந்த் திரு­வள்­ளூர் மாவட்­டம், கும்­மி­டிப்­பூண்டி தொகுதி தேமு­திக வேட்­பா­ளர் கே.எம்.டில்லி, பொன்­னே­ரி­யில் போட்­டி­யி­டும் அம­முக வேட்­பா­ளர் பொன்­ராஜா ஆகி­யோரை ஆதரித்து கும்­மி­டிப்­பூண்­டி­யில் பிர­சா­ரம் செய்­தார்.

விஜ­ய­காந்­தைக் காண ஏரா­ள­மான தொண்­டர்­களும் பொது­மக்­களும் கும்­மி­டிப்­பூண்டி பேருந்து நிலை­யம் அருகே குவிந்­தி­ருந்­த­னர்.

மக்­கள் வெள்­ளத்­தில் ஊர்ந்து சென்­றது வேன். அவ­ரு­டன் இருந்த உத­வி­யா­ளர்­கள் அவ­ருக்கு உத­வி­னர். எது­வும் பேசா­மல் மௌன­மாக கடந்த விஜ­ய­காந்­தின் நிலை­யைக் கண்டு, வருத்தமடைந்த தொண்டர்கள் அவரை அன்போடு வழியனுப்­பி­னர்.

இதற்­கி­டையே, தேமு­திக பொரு­ளா­ளர் பிரே­ம­ல­தா கொரோனா பரிசோதனை செய்து கொண்ட நிலையில் அவருக்கு தொற்றில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.