ஐந்து மாவட்டங்களில் நாளும் அதிகரிக்கும் கிருமிப் பரவல்

ஐந்து மாவட்டங்களில் நாளும் அதிகரிக்கும் கிருமிப் பரவல்

1 mins read
c3fd1111-abe5-4dde-a039-432eae7ba2d3
-

சென்னை: தமி­ழ­கத்­தில் சென்னை, செங்­கல்­பட்டு, கோவை, திரு­வா­ரூர், தஞ்­சா­வூர் ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளில் ஒவ்­வொரு நாளும் கொரோனா கிரு­மிப் பர­வல் கணி­ச­மாக அதி­க­ரித்து வரு­வ­தாக மத்­திய சுகா­தா­ரத்­துறை எச்­ச­ரித்­துள்­ளது.

தேர்­தல் முடிந்தபின்­னர் இந்த ஐந்து மாவட்­டங்­க­ளி­லும் ஊர­டங்கு கட்­டுப்­பா­டு­கள் அம­லுக்கு கொண்டு­வர வாய்ப்­பு­கள் உள்­ள­தா­க­வும் அப்­போ­து­தான் கிரு­மிப் பர­வலை முறி­ய­டிக்கமுடி­யும் என்­றும் தக­வல்­கள் தெரி­வித்துள்­ளன.

நாடு முழு­வ­தும் கொரோனா கிரு­மிப் பர­வ­லின் இரண்­டா­வது அலை வேக­மாக பர­வத் தொடங்கி ­இருக்­கிறது. குறிப்­பாக தமி­ழ­கம், டெல்லி, மகா­ராஷ்­டிரா உள்­ளிட்ட எட்டு மாநி­லங்­களில் பாதிப்பு அதி­க­மாகி இருப்­ப­தாக மத்­திய அரசு தக­வல் தெரிவித்­துள்­ளது.

தடுப்பு நட­வ­டிக்­கை­களை தீவி­ரப்­ப­டுத்­த­வில்லை என்­றால் மீண்­டும் ஊர­டங்கு உத்­த­ரவு போட வேண்­டிய சூழல் ஏற்­படும் என்­றும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

இத­னால், அந்­தந்த மாநில அரசு­களும் கொரோனா தடுப்பு நட­வ­டிக்­கை­களைத் தீவி­ரப்­ப­டுத்தியுள்­ளன. மேலும் கொரோனா பர­வ­லைத் தடுக்க அந்­தந்த மாநில அர­சு­கள் சுய­மாக முடி­வெ­டுக்­க­லாம் என­வும் மத்­திய அரசு தெரிவித்­துள்­ளது.

கடந்த மார்ச் 1ஆம் தேதியில் இருந்த கிரு­மிப் பர­வல் எண்­ணிக்­கையைவிட தற்போது இந்த எண்­ணிக்­கை­யா­னது இரு மடங்கு அதி­க­மாகி உள்­ளது.