சென்னை: தமிழகத்தில் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணை யம் அதிகாரபூர்வமாக தெரி வித்துள்ளது. அத்துடன், இம்மாநிலத்தில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 10 லட்சம் பேர் அதிகமாக உள்ளனர்.
அதன்படி, 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேர் ஆண் வாக்காளர்கள். 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேர் பெண் வாக்காளர்கள். மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஏழா யிரத்து 192 பேர் உள்ளனர்.
அதிகபட்சமாக சோழிங்க நல்லூரில் 698,820 வாக்காளர் களும் குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 175,770 வாக்காளர்களும் உள்ளனர். மாவட்டவாரியாக அதிகபட்சமாக சென்னையில் 40 லட்சத்து 57 ஆயிரத்து 61 வாக்காளர்களும் குறைந்த பட்சமாக அரியலூர் மாவட்டத் தில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 983 வாக்காளர்களும் உள்ள தாக தெரியவந்துள்ளது.
14 மீனவர்கள் கைது
ராமேஸ்வரம்: நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் அவர்களது எல்லையைத் தாண்டி விட்டதாகக் கூறி 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் அத்துடன், ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

