செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
cec5735b-b400-49b0-8ab2-bbe8c1b1ddf4
-

பூப்பந்து விளையாடி வாக்கு சேகரிப்பு

கோவை: கோவை தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் விளையாட்டுத் திடலில் பூப்பந்து விளையாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பந்தய சாலை பகுதியில் நடைப்பயிற்சி சென்றவர்களிடமும் தாமரை சின்னத்தில் வாக்களிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

சாலையோரம் வீசப்பட்ட ரூ.1 கோடி

திருச்சி: திருச்சி மாவட்டம், முசிறி அருகில் உள்ள பெட்டவாய்த்தலை சாலையோரம் கிடந்த சாக்குமூட்டையில் கட்டுக்கட்டாக கேட்பாரற்று ரூ.1 கோடி ெராக்கம் கிடந்தது. இப்பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டவையா? என்பது குறித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மாமனாருக்கு மருமகள் வாக்கு சேகரிப்பு

தேனி: போடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி.யின் மனைவி ஆனந்தி, இதர பெண்களுடன் சேர்ந்து வீடுவீடாகச் சென்று "எனது மாமனாரை வெற்றிபெறச் செய்யுங்கள்," என வாக்கு சேகரித்து வருகிறார். அதிமுக வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் ஓபிஎஸ் பிரசாரம் செய்துவரும் நிலையில், அவரது மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி., ஜெயபிரதீப் ஆகியோர் தந்தைக்காக பிரசாரம் செய்து வருகின்றனர்.