'பொது முடக்கத்துக்கு வாய்ப்பில்லை'

'பொது முடக்கத்துக்கு வாய்ப்பில்லை'

1 mins read
7af567e8-b7a9-45fc-8649-940f1b880bd4
சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் தேர் இழுக்கும் திருவிழா கடந்த வியாழனன்று நடந்தது. பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள தேரில் அருள்மிகு கபாலீஸ்வரர் ஊர்வலம் வர, தேரை மக்கள் இழுத்து வருகின்றனர். கொரோனா கிருமிப்பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,779 பேருக்குப் பாதிப்பு உறுதியானது. இந்நிலையில், கொரோனா கிருமிப் பரவல் பயமின்றி இப்படி கூட்டமாய் மக்கள் குவிந்திருந்தனர். படம்: ஏஎஃப்பி -

சென்னை: சட்டமன்றத் தோ்தலுக்குப் பிறகும் பொது முடக்கம் அமல்படுத்தப்படமாட்டாது என்று சுகாதாரத் துறை செயலா் டாக்டா் ஜெ.ராதா கிருஷ்ணன் தெரிவித்தாா். இதுதொடா்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் மக்க ளைக் கேட்டுக் கொண்டார்.

சட்டமன்றத் தோ்தலுக்குப் பிறகு பொதுமுடக்க அறிவிப்பு வெளி யாகலாம் என்றும் குறிப்பாக, சென்னை, திருவாரூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படலாம் என்றும் செய்திகள் பரவின.

அதனைத் திட்டவட்டமாக மறுத் துள்ள ராதாகிருஷ்ணன், "தமிழகத்தில் கிருமித்தொற்று வேகமாகப் பரவி வந்தாலும் அது இரண்டாம் அலையாக உருவாக வில்லை. கடந்த காலங்களில் அதிக பட்சமாக ஒரே நாளில் 6,900க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

"தற்போது அந்த எண்ணிக்கை 1,700ஆக மட்டுமே உள்ளது. எனவே, இரண்டாம் அலை உருவாகிவிட்டதோ என்ற அச்சம் தேவையில்லை.

"இருப்பினும் முகக்கவசம் அணிவது, தனிநபா் இடைவெளியை சரியான முறையில் கடைப்பிடிப்பது அவசியம்," என்று கூறினார்.