வாக்குப்பதிவுக்கு 10 நாள்களே எஞ்சியுள்ளதால் பரபரக்கும் வேட்பாளர்கள் அனைத்து கட்சியினரும் துரித வாக்கு சேகரிப்பு

மதுரை: தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட காய் நகர்த்தும் ஒவ்வொரு கட்சியினரும் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

"எங்களுக்கும் ஒரு வாய்ப்பை வழங்க ஒருமுறை வாக்களியுங்கள்,"

என்று கெஞ்சாத குறையாக மக்க ளிடம் கோரி வருகின்றனர்.

வாக்குப் பதிவுக்கு ஏறக்குறைய இன்னும் பத்து நாள்களே உள்ள தால், மாநி­லம் முழு­வ­தும் அனைத்து கட்சியின­ரும் பிர­சா­ரத்­தில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்­ள­னர்.

அத்துடன், தொகு­தி­கள்­தோ­றும் வேட்­பாளர்­களும் அர­சி­யல் கட்­சி­யி­ன­ரும் நேரில் சென்று வாக்கு சேக­ரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்­டத்­தில் தனது கட்சி வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து முதல்­வர் பிர­சா­ரம் செய்தபோது, "கண்­ணுக்­குத் தெரி­யாத காற்­றில்கூட திமுக ஊழல் செய்துவிடும். திமுக அரா­ஜக கட்சி. இக்­கட்சி மட்­டும் மீண்­டும் ஆட்­சிக்கு வந்­தது என்றால் நாட்­டையே பட்டா போட்டு விற்­று­வி­டு­ம்.

"ஒரு நாடு வள­ர­வேண்­டும் என்­றால் அங்கு அமைதி இருக்­க­வேண்­டும். அந்த அமை­தியை அதிமுக அர­சால் மட்­டுமே கொடுக்கமுடி­யும்," என்­றார்.

சென்னை ஆலந்­தூர், பல்­லா­வரம், ேசாழிங்­க­நல்­லூர் தொகு­தி­களில் போட்­டி­யி­டும் திமுக வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டா­லின் பேசிய போது, "திமுக ஆட்­சிக்கு வந்­தால் சொந்­த­மாக ஆட்டோ ஓட்­டும் தொழி­லா­ளர்­க­ளுக்கு அர­சுத் தரப்­பில் ரூ.10,000 மானி­யம் வழங்­கப்­படும்," என்று கூறியவர், கடந்த பத்தாண்­டு­க­ளாக ஆட்­சிப் பொறுப்­பில் இருந்­த­வர்­கள் தொழிற்­சா­லை­களை உரு­வாக்­கி­னார்­களா? வேலை­ வாய்ப்பைத்தான் கொடுத் தார்­களா? என வினா எழுப்­பி­னார்.

நடக்கவுள்ள தேர்­த­லில் அம­முக சார்­பில் கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­கள் அனைத்­தும் நிச்­ச­யம் நிறை­வேற்­றப்­படும் என்று அக்­கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ளர் டிடிவி தின­க­ரன் சேலம் தாத­காப்­பட்­டி­யில் பேசிய போது தெரி­வித்தார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்­கி­ரஸ் வேட்­பா­ள­ரும் காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் ஈ.வி.கே.எஸ். இளங்­கோ­வ­னின் மக­னு­மான திரு­மகன் தின­சரி சந்­தை­யில் வியா­பா­ரி­க­ளி­டம் வாக்குச் சேக­ரித்­தார்.

கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டம், ரிஷி­வந்­தி­யம் தொகு­தி­யில் போட்­டி­யிடும் அதி­முக வேட்­பா­ளர் எஸ்.கே.டி.சி.ஏ. சந்­தோஷ், அங்­குள்ள ஒரு சாலை­யோ­ரக் கடை­யில் பானி­பூரி விற்றபடி பிரசா­ரம் செய்­தார்.

திண்­டுக்­கல் மாவட்­டம், நிலக்­ கோட்டை தொகுதியில் பிரசாரம் செய்த விஜயபிரபாகரன், தேமு­திக வேட்பாளர் ராம­சா­மியின் பெயரை சிவக்­கு­மார் என தவ­றா­கக் கூறினார். தொண்­டர்­கள் சுட்­டிக்­காட்­டி­ய­தும் உடனே சுதா­ரித்துக்கொண்டு, ராம­சாமி எனக் குறிப்­பிட்ட விஜயபிர­பா­க­ரன், "நீங்­கள் எல்­லோ­ரும் கவ­ன­மாக இருக்­கி­றீர்­களா எனப் பரி­சோ­தித்­தேன்," என்று கூறி மழுப்­பி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!