சென்னை துறைமுகம் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் வினோஜ், நடிகை கௌதமி, சிவாஜியின் பேரன் நடிகர் துஷ்யந் ஆகியோருடன் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த வாக்காளர்களைக் கவர உணவகம் ஒன்றில் அவர் தோசை வார்த்துக் கொடுத்தார். தோசையை ஊற்றிய சிறிது நேரத்திலேயே அதை திருப்பிப் போட்டதால் தோசை இரண்டாகப் பிய்ந்தது. இதைக்கண்ட அனைவரும் கைதட்டி சிரித்தனர். ஆனாலும், மனம் தளராத வினோஜ் அந்த தோசையை வட்ட வடிவமாகக் கொண்டு வருவதற்கு மீண்டும் அதை புரட்டிப்போட்டார். இறுதியில், தோசை கொத்து பரோட்டாவாக மாறிப்போனது. படம்: ஊடகம்
திருப்பத்தூர்: ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக ஆயத்தமாகி வரும் வேட்பாளர்கள், தண்ணீர் அடித்துக் கொடுப்பது, நடனமாடுவது, துணி களை சலவை செய்துகொடுப்பது என மக்கள் விரும்பும் வேலைகளை செய்துகொடுத்து வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர்.
ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார், வாக்கு சேகரிக்கச் சென்ற இடத் தில் ஒரு பெண்மணிக்கு தண்ணீர் குழாயில் குடத்தில் தண்ணீர் அடித்துக்கொடுத்தார்.
திருப்பத்தூர் அருகே தோ்தல் பிரசாரத்தின்போது பொது மக்களுடன் இணைந்து நடனமாடிய படியே திமுக எம்எல்ஏ அ.நல்ல தம்பி வாக்குச் சேகரித்தாா்.அப்போது அங்கிருந்த பொது மக்களும் அவரது ஆதரவாளர்களும் கைதட்டி ரசித்தனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் எழும்பூர் வேட்பாளர் பிரியதர்ஷினி, உணவகம் ஒன்றில் மீன் வறுத்துக் கொடுத்து வாக்குச் சேகரித்தார்.

