திமுக வேட்பாளருக்குச் சொந்தமான 18 இடங்களில் தொடர்ந்த சோதனை

திமுக வேட்பாளருக்குச் சொந்தமான 18 இடங்களில் தொடர்ந்த சோதனை

1 mins read
10eb5cd4-c53c-4546-95c6-411bbdd76630
-

திரு­வண்­ணா­மலை: திரு­வண்­ணா­மலை, வேலுார், கிருஷ்­ண­கிரி, தர்­ம­புரி ஆகிய நான்கு மாவட்­டங்­க­ளுக்­கும் திமு­க­வின் தேர்­தல் பொறுப்­பா­ள­ராக எ.வ.வேலு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். திரு­வண்­ணா­மலை தொகுதி வேட்­பா­ள­ரா­க­வும் இவர் போட்டியிடு­கி­றார்.

அவ­ருக்குச் சொந்­த­மான கல்­லூரி, அறக்­கட்­டளை, பெட்­ரோல் நிலை­யம், குடி­தண்­ணீர் தொழிற்­சாலை, கிரா­னைட் தொழிற்­சாலை, கூட­லுார் கிரா­மத்­தி­லுள்ள எ.வ.வேலு­வின் பூர்­வீக வீடு, சென்னை ஆழ்­வார்­பேட்­டை­யில் உள்ள வீடு உள்­ளிட்ட 18 இடங்­களில் ஒரேநேரத்­தில் வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தி­னர். இச்சோத­னை­யில் 3.5 கோடி ரொக்­கம் பறி­மு­தல் செய்­யப்­ பட்­டுள்­ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வாக்­கா­ளர்­க­ளுக்­குப் பணம் வழங்­கப்­ப­டு­வ­தாக புகா­ர­ளிக்­கப்­பட்டதால் இந்தச் சோதனை நடை­பெறுவதாக தக­வல்­கள் வெளி­யாகின.

நேற்­று­முன்­தி­னம் தொடங்­கிய சோதனை இரண்­டாம் நாளாக நேற்­றும் தொடர்ந்­தது.

இந்­நி­லை­யில், தேர்­த­லுக்­கும் இந்தச் சோதனை நட­வ­டிக்கை களுக்­கும் தொடர்­புள்­ளதா என்று செய்­தி­யா­ளர்­கள் கேட்­ட­தற்கு, "வரு­மான வரித்­து­றைக்கு கிடைக்­கும் தக­வ­லின் அடிப்­ப­டை­யி­லேயே சோத­னை­கள் நடை­பெ­று­கிறது.

"இந்த சோத­னைக்­கும் தேர்­த­லுக்­கும் தொடர்புள்ளதா என்பது குறித்து விசா­ர­ணைக்­குப் பின்னரே தெரிய­வ­ரும்," என்று தமிழக தலைமைத் தேர்­தல் அதி­காரி சத்­ய­பி­ரத சாகு கூறி­னார்.