'ஒரு குடும்பத்துக்கு ரூ.1 கோடி தந்து கோடீஸ்வரர் ஆக்குவோம்'

'ஒரு குடும்பத்துக்கு ரூ.1 கோடி தந்து கோடீஸ்வரர் ஆக்குவோம்'

1 mins read
f82254a9-9b19-4b30-b6fe-f3fdcfa20202
-

சென்னை: இந்து மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்தப்படும்.

ஒரு குடும்பத்துக்கு ரூ.1 கோடி வீதம் நிதி வழங்கி மக்கள் அனை வரையும் கோடீஸ்வரர்களாக மாற்று வோம். ராமேஸ்வரம் புனித தீவாக அறிவிக்கப்படும்.

மெரினா கடற்கரைக்கு தமிழர் கடற்கரை என்று பெயர் சூட்டப்படும்.

அத்துடன், செயின்ட் ஜார்ஜ் கோட்டை வள்ளுவன் கோட்டையாக மாற்றப்படும் என பல தாராள அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலைத் தொடங்குவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களில் அர்ஜுன் சம்பத்தும் ஒருவராவார்.

விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் இவரது இந்து மக்கள் கட்சி 72 தொகுதி களில் சுயேச்சையாக தனித்துக் களம் காண உள்ளது.

இந்நிலையில், இந்து மக்கள் கட்சிக்கும் பாஜக வேட்பாளர் களுக்கும் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆதரவு அளிக்கவேண்டும்.

இதுகுறித்து நான் ரஜினிகாந்தை விரைவில் சந்தித்து ஆதரவு கேட் பேன் என்று கூறினார்.

எங்களது இந்து மக்கள் கட்சி போட்டியிடாத இடங்களில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.