சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற் பட்டோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனா கிருமிப் பாதிப்புக்கு ஆளானோர் உள்ளிட்டோர் தங்க ளது வாக்குகளை வீட்டில் இருந்த படியே அளிக்க சிறப்பு ஏற்பாடு களைத் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
இதுகுறித்து, தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளா்களிடம் பேசியபோது, "தமிழகத்தில் 1,38,497 போ் அஞ்சல் வாக்குகளைச் செலுத்த தகுதிபெற்றுள்ளனர். அவா்களுக் கான வாக்குகளை வழங்கும் பணியை அந்தந்த தொகுதி களைச் சோ்ந்த தோ்தல் அதி காரிகள் மேற்கொண்டு வருகின்ற னா்.
"இந்த அஞ்சல் வாக்குகளைப் பெற சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக 11,646 பேரும் குறைந்த பட்சமாக தேனி மாவட்டத்தில் 562 பேரும் விண்ணப்பித்துள்ளனா்," என்று தெரிவித்தார்.

