சென்னை: இந்தியாவில் தமிழ்நாடு உள்பட ஐந்து மாநிலங்களில் அடுத்தடுத்து தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, இப்போது முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
அனைத்து கட்சியினரும் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், யார் வெற்றிபெறுவார், யார் முதல்வர் ஆவார் போன்ற கணிப்புகளை ஊடகங்கள் வெளியிட்டு வந்தன.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களி லும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் நேற்று 27ஆம் தேதி முதல் வரும் ஏப்ரல் 29ஆம் தேதிவரை தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தவோ, அதன் முடிவுகளை அச்சு, மின் ஊடகங்களில் வெளியிடவோ தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

