திருவண்ணாமலை, கரூர், இலுப்பூரில் அதிகாரிகள் சோதனை கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்

திருவண்ணாமலை, கரூர், இலுப்பூரில் அதிகாரிகள் சோதனை கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்

2 mins read
90eb1408-84da-4294-884c-36d9a7a020c7
-

சென்னை: தமி­ழக சட்­ட­மன்­றத் தேர்­தல் இன்­னும் ஒன்­பது நாள் களில் நடை­பெற உள்­ளது.

இச்­சூ­ழ­லில், வாக்­கா­ளர்­க­ளி­டம் பணத்­தைக் கொடுத்து குறுக்கு வழி­யில் வெற்­றி­பெறத் துணியும் வேட்­பா­ளர்­களை எச்­ச­ரிக்­கும் விதத்தில், வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் ஆங்­காங்கே சோத னை­களை முடுக்கிவிட்­டுள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் இது­வரை நடத்­தப்­பட்­டுள்ள சோத­னை­கள் மூலம் ரூ.55 கோடி ரொக்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

மாநி­லத்­தில் தற்­போது நடந்து வரும் அதி­முக அர­சின் பத­விக்­கா­லம் மே மாதம் 24ஆம் தேதி­யுடன் முடி­வ­டை­வ­தால், இங்­குள்ள 234 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்­கும் ஒரே­ கட்­ட­மாக வரும் ஏப்­ரல் 6ஆம் தேதி தேர்­தல் நடத்­தப்­பட உள்­ளது.

இத்­தேர்­த­லின் பொருட்டு 250 அதி­கா­ரி­கள் கொண்ட சிறப்­புப் படை­யி­னரும் 400 வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­களும் கைகோத்து தமி­ழ­கம் முழு­வ­தும் தீவிர சோத­னை­களில் இறங்கி உள்­ள­னர்.

வரு­மான வரித்­து­றைக்கு கிடைக்­கும் தக­வல்­கள் அடிப்­ப­டை­யில் சோத­னை­களை நடத்­தும்­படி தேர்­தல் ஆணை­யம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து, சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் விஜ­ய­பாஸ்­க­ரின் சகோ­த­ரர் உத­ய­கு­மா­ரின் உத­வி­யா­ளர் வீட்­டில் அதி­கா­ரி­கள் 13 மணி நேரம் சோதனை நடத்தினர்.

உத­ய­கு­மா­ருக்­குச் சொந்­த­மான தனி­யார் கல்­லூரி இலுப்­பூர் அருகே செயல்­பட்டு வரு­கிறது. அதில், விரா­லி­ம­லை­யைச் சேர்ந்த வீர­பாண்டி என்­ப­வர் உத­வி­யா­ள­ரா­கப் பணி­பு­ரிந்து வரு­கி­றார். அவ­ரது வீட்­டில் நள்­ளி­ரவு வரை நடந்த சோதனையில் ரூ.50 லட்­சம் பண­மும் முக்­கிய ஆவ­ணங்­களும் கைப்­பற்­றப்­பட்டுள்ளது.

இதற்­கி­டையே, திரு­வண்­ணா­மலை தொகு­தி­யில் போட்­டி­யி­டும் திமுக வேட்­பா­ளர் எ.வ.வேலு­வுக்­குச் சொந்­த­மான கரூ­ரில் உள்ள நிறு­வ­னங்­கள் உள்­பட 25க்கும் மேற்­பட்ட இடங்­களில் இரு நாள்­க­ளாக நடத்­தப்­பட்ட சோத­னை­யில் கணக்­கில் வராத ரூ.5.2 கோடி ரொக்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

இந்­நி­லை­யில், "திமுக கூட்­ட­ணி­யின் வெற்­றி­யைத் தடுக்­கவே இது­போன்ற சோத­னை­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன," என்று மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்டு கட்­சி­யின் மாநி­லச் செய­லா­ளர் கே.பால­கி­ருஷ்­ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"திரு­வண்­ணா­மலை தொகு­தி­யில் பாஜக போட்­டி­யி­டும் நிலை­யில் எ.வ.வேலு வீட்­டில் சோதனை நடத்­தி­யிருப்பது உள்­நோக்­கம் கொண்­டது. அவ­ரு­டைய பெய­ருக்கு களங்­கம் உரு­வாக்­கு­வ­தற்­காக பாஜக இச்­செ­யலை செய்­கிறது. வெளிப்­ப­டை­யான, சம­மான விளை­யாட்­டுத் தளம் அனை­வ­ருக்­கும் அளிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், இந்த உள்­நோக்­கம் கொண்ட நட­வ­டிக்­கை­களை மத்­திய அரசு நிறுத்­த­வேண்­டும்," என்று அவர் கூறி­யுள்­ளார்.