மேற்கு வங்கம்: மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
இந்த முதல் கட்ட வாக்குப்பதி வின்படி நேற்று இந்திய நேரப்படி மாலை 4 மணி அசாமில் 62.36%, மேற்கு வங்கத்தில் 70.17% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
மேற்கு வங்கத்தில் 294 உறுப்பி னா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது.
இதையடுத்து முதற்கட்டமாக பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் புருலியா, ஜாா்கிராம், பாங்குரா, கிழக்கு மிதுனபுரி, மேற்கு மிதுனபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளில் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
அதேபோல் அசாமில் 123 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவையொட்டி மத்திய காவல்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, கடந்த முறையைவிட தற்போது மாநிலம் முழுவதும் கூடுதலாக 37% வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல்கட்டத் தேர்தலுக்காக 10,288 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட உள்ளது. 30 தொகுதிகளில் 191 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அசாமில் 264 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், 81 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இங்கு மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பாஜக கடும் முயற்சியில் இறங்கி உள்ளது.
தேர்தல் நடைபெறும் இடங்களில் வாக்களிக்க ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர்.
வாக்குச்சாவடிகளில் உள்ளூர் போலிசாருடன் துணை ராணுவப் படை வீரர்களும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

