கோவை: கோவை சிங்காநல்லூர் தொகுதி மநீம வேட்பாளர் மகேந் திரனை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உருக்கமாகப் பேசியபோது, "இலவசம் உங்கள் ஏழ்மையைப் போக்காது. அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யாது. எனது 60 ஆண்டுகால வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தியது தமிழகம்தான். எஞ்சியிருக்கும் வாழ்க்கையும் தமிழக மக்களுக்காகவே செலவிடப்போகிறேன்," என்று கூறினார்.
இதேபோல், சென்னை அண்ணா நகர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிடும் பொன்ராஜுக்கு ஆதரவு திரட்டி பேசிய கமல்ஹாசன், "தேர்தலுக்காக நேர்மையைப் பற்றி பேச வரவில்லை. தலைமை நேர்மையாக இருந்தால்தான் அடிமட்டம் வரையில் நேர்மை இருக்கும்," என்றும் கூறினார்.
"மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன். எப்படியாவது பணம் சம்பாதித்து விடலாம் என்ற எண்ணம் எல்லாம் கிடையாது," என்றவர், "மநீம வேட்பாளர்கள் யாரும் இதுவரை சிறை சென்றதில்லை. 50 ஆண்டுகள் அஜாக்கிரதையாலும் பேராசையாலும் நைந்துபோன தமிழகத்தை சீரமைக்கவேண்டியது எங்களது கடமையாக நினைத்து வந்துள் ளோம். அந்த விதையை நீங்கள் தூவினால் எதிர்கால சந்ததி உங் களை வாழ்த்தும்," என்றார்.
இலவசங்கள் என்பது ஒருநாள் விருந்து போன் றது. அது ஒருபோதும் ஏழ்மையைப் போக்காது. வாழ்நாள் முழுவதும் சோறு போடாது.
மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன்

