பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் நால்வர் உயிரிழப்பு

பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் நால்வர் உயிரிழப்பு

1 mins read
db00d750-de48-4c39-8a9b-58e2ceae9fde
-

மேற்கு வங்­கம்: பிர­த­மர் மோடி­யின் வரு­கைக்கு எதிர்ப்­புத் தெரி­வித்து வங்­க­தே­சத்­தில் நடந்த போராட்­டத்­தில் நால்வர் கொல்­லப்­பட்­ட­னர்.

இரு­நாள் பய­ண­மாக பிர­த­மர் மோடி வங்­க­தே­சம் சென்­றுள்­ளார். இந்­நி­லை­யில் மோடி­யின் வரு­கைக்கு எதிர்ப்­புத் தெரி­வித்து சிட்­ட­காங், டாக்கா நக­ரங்­களில் போராட்­டங்­கள் நடத்­தப்­பட்­டன.

இதில் சிட்­ட­காங் நக­ரில் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்­கும் போலி­சா­ருக்­கும் இடையே மோதல் ஏற்­பட்­டது. கண்­ணீர் புகை குண்டுகளை வீசி­யும், தண்­ணீ­ரைப் பீய்ச்­சி­ய­டித்­தும் விரட்­டி­னர்.

ஆனா­லும் போராட்­டம் தொடர்ந்­த­தால் கூட்­டத்­தைக் கலைக்க போலி­சார் ரப்­பர் குண்­டு­களை வைத்து துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­னர். இந்த மோத­லில் நால்வர் உயி­ரி­ழந்­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதற்கிைடயே, மேற்­கு­வங்­கத்­தின் 30 தொகு­தி­க­ளுக்­கும் அசாம் மாநி­லத்­தின் 47 தொகு­தி­க­ளுக்­கும் முதல்­கட்ட வாக்­குப்­ப­திவு நடை­பெற்று வரு­கிறது.

முதல்­கட்­டத் தேர்­தல் நடை­பெ­றும் இடங்­களில் பதற்­ற­மான பகு­தி­க­ள் இருப்­ப­தால் கூடு­தல் துணை ராணு­வப்­ப­டை­யி­னர் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர். இந்நிலையில் மேற்­கு­வங்­கத்­தின் பக­வான்­பூர் தொகு­தி­யில் வாக்­குச்­சா­வடி மையம் அருகே துப்­பாக்­கிச்­சூடு நடந்ததில் இரு பாது­காப்­புடை வீரர்­கள் காய­ம­டைந்­துள்­ள­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.