மும்பை: பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப் பட்டிருப்பது உறுதியாகி உள்ளது.
லேசான அறிகுறிகளுடன் தமக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், தமது வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு கிருமித்தொற்று ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
"வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள் ளேன். நாடு முழுவதிலும் என்னையும் மற்றவர்களையும் சிறப்பாகக் கவனித்து வரும் சுகாதாரத்துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

