அந்தியூர்: கடந்த 40 ஆண்டுகளாக நான் பலமுறை தேர்தலில் போட்டியிட்டுவிட்ேடன். எனினும், எனது அருமை மக்களுக்குப் புரியாததால்தான் நான் தோல்வியைத் தழுவி வருகிறேன் என்று சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தன்னைத்தானே நொந்துகொண்டுள்ளார்.
"மக்கள் தொடர்ந்து செய்து வரும் தவறுகளால்தான் நான் இன்னும் வெற்றிபெறாத வேட்பாளராகவே இருந்து வருகிறேன்," என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
அந்தியூர் தொகுதியில் எம்ஜிஆர் ரசிகர் எனக் கூறிக்கொண்டு சுயேச்சையாக மீண்டும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள சேக் தாவூத் என்ற வேட்பாளர், 40 வருடமாக தன்னைத் தோற்கடிக்கும் வாக்காளர்களைக் கவர்வதற்காக வாக்குறுதிகளையும் அள்ளி வீசியுள்ளார்.
பெண்களுக்கு மாதம் 25,000 ரூபாயும் கைபேசியும் இலவசமாகத் தரப்படும் என்றும் கூறியுள்ளார்.
தான் வெற்றிபெற்றால் பாண்டிச் சேரியில் இருந்து கலப்படமற்ற மதுவை வாங்கி வந்து அதை இளைஞர்களுக்குத் தருவதாகவும் அவர் வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
"நான் புகைபிடிக்க மாட்டேன். எனக்கு மது அருந்தும் பழக்கமும் இல்லை. பெண்களைக் கண்டால் கையெடுத்து கும்பிடுவேன். ஆனால், உங்களுக்காக உழைப் பேன். உங்கள் தேவையை நிறை வேற்றுவேன். தயங்காமல் எனக்கு வாக்குப் போடுங்கள்," என்று மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார்.

