சென்னை: தமிழகத்தில் படிப்படி யாக கட்டுக்குள் வந்துகொண் டிருந்த கொரோனா கிருமி பாதிப்பு, கடந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இப்போது 2,000 பேரைக் கடந்து உக்கிரமடைந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளி யிட்டுள்ள அறிக்கையின்படி, "தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,089 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,77,279ஆக அதிகரித்துள்ளது.
"இத்தொற்றுக்குச் சிகிச்சை பெற்ற 1,241 பேர் குணம்பெற்று வீடு திரும்பினா். இவர்களையும் சேர்த்து இதுவரை 8,52,463 பேர் குணம் பெற்றுள்ளனர்.
"சனிக்கிழமை சிகிச்சை பல னின்றி ஒன்பது பேர் உயிரிழந்தனர். இவர்களையும் சேர்த்து 12,659 பேர் உயிரிழந்துள்ளனர்.
"தற்போதைய நிலையில் 12,157 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் சனியன்று 775 பேருக்கு இப்பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை இங்கு இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,44,686ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 4,785 பேர் இப்பாதிப்புக்குச் சிகிச்சை பெறுகின்றனர்.
இரண்டாவது அலை கார ணமாக தமிழகத்தில் கிருமி பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. முகக்கவசம் அணிவதை பலரும் பெரிதாக விரும்பாத காரணமே பாதிப்பு இந்த அளவு மீண்டும் அதிகரிக்க காரணம் என்றும் கூறப்படுகிறது. முதல் அலையைவிட இரண்டாவது அலையின் தாக்கம் எப்படி இருக்கப்போகிறதோ என்ற அச்சமும் மக்களிடம் அதிகரித்து வருகிறது.
கொரோனா நோயாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு
கிருமிப்பரவலால் பாதிக்கப்பட்ட வர்கள் வாக்களிக்க ஏதுவாக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறிஉள்ளது.
இதுகுறித்து ஆணையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "வாக்குச்சாவடிகளில் 15 முழு கவச உடைகள், முகக் கவசங்கள் தயார் நிலையில் வைக்கப்படும். இப்பணிக்காக ஒரு வாக்குச்சாவடிக்கு இருவர் என்ற கணக்கில் 12,000 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்," எனத் தெரிவித்துள்ளது.

