ராகுல் காந்தி: தமிழ்மொழியைக் கற்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன் தமிழகமின்றி இந்தியா இல்லை

ராகுல் காந்தி: தமிழ்மொழியைக் கற்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன் தமிழகமின்றி இந்தியா இல்லை

2 mins read
9f4040b7-c9f3-4db7-ad3d-aa471ee1b647
சென்னையில் பிரசாரத்தில் பேசும் ராகுல் காந்தி. படம்: ஏஎஃப்பி -

சென்னை: தமி­ழக மக்­கள் அனை வரும் எனக்கு சகோ­தர, சகோ­த­ரி­கள்­தான் என்று கூறியுள்ள காங்­கி­ரஸ் கட்­சி­யின் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி, இந்த தமி­ழ­கம் இல்­லா­மல் இந்­தி­யாவே இல்லை என்­றும் புக­ழா­ரம் சூட்­டி­னார்.

"நாம் ஒரு மடங்கு அன்பு காட்டினால் தமிழர்கள் பன்மடங்கு அன்­பைக் காட்­டு­வார்­கள் என்­பது எனக்­குத் தெரி­யும்.

"நான் பிறப்பால் தமிழன் இல்லை என்றாலும் தமிழக மக்க ளின் உணர்வுகளை நன்கு உணர்ந்தவன். தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்," என்று அவர் மேலும் கூறினார்.

"நான் தமிழ்ெ­மா­ழி­யைக் கற்கவும் தொடர்ந்து முயற்சி செய்து வரு­கி­றேன்.

"தமி­ழச்சி தங்கபாண்­டி­ய­னின் கவி­தை­களைப் படித்­துள்­ளேன்," என்­றும் அவர் தெரிவித்தார்.

தமி­ழக மக்­கள் மத்­தி­யில் பெரிய எதிர்­பார்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி இருக்­கும் சட்­ட­மன்­றத் தேர்­தல் அடுத்த ஏப்­ரல் மாதம் 6ஆம் தேதி நடை­பெற உள்­ளது.

இந்த தேர்­த­லில் ஆளும் அதி­முக, எதிர்க்­கட்­சி­யான திமுக இடையே கடும் போட்டி நில­வு­கிறது.

ஒன்று ஆட்­சி­யைத் தக்க வைத்­துக் கொள்­ள­வும் மற்­றொன்று ஆட்­சிக் கட்­டி­லில் அம­ர­வும் ஒன்­றின் மீது மற்­றொன்று கடும் விமர்­ச­னங்­களைச் செய்து வரு­கின்­றன.

அத்துடன், அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்­துக் கட்­சி­யி­ன­ரும் தங்­க­ளது பிர­சா­ரங்­க­ளை­யும் வாக்கு சேக­ரிப்­பு­க­ளை­யும் தீவி­ரப்படுத்தி உள்ள­னர்.

சென்னை வேளச்­சேரி தொகுதி யில் காங்­கி­ரஸ் சார்­பில் போட்­டி­யிடும் ஹசன் மௌலானா, சைதாப்­பேட்டை திமுக வேட்­பா­ளர் மா.சுப்­பிரமணி­யன், திருப்பெ­ரும்­பு­தூர் காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் செல்­வ­பெருந்­தகை, சோளிங்­கர் காங்­கி­ரஸ் வேட்­பா­ளர் முனி­ரத்­தி­னம் ஆகி­யோரை ஆத­ரித்து சென்­னை­யில் அவர் பிர­சா­ரம் செய்தார்.

திமுக-காங்­கி­ரஸ் அமைத்­துள்ள மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி மூலம் தமி­ழ­கத்­திற்கு புதிய சிந்த னைகள், வழி­மு­றை­களை வழங்க முடி­யும் எனக் குறிப்­பிட்ட ராகுல் காந்தி, இந்த தேர்­த­லில் இந்தக் கூட்­டணி வெற்றிபெற்று, திமுக தலை­வர் மு.க.ஸ்டா­லின் தமி­ழக முத­ல்வராக பத­வி­யேற்­பார் என்­றும் நம்­பிக்கை தெரி­வித்­தார்.