தேனிலவு செல்லாமல் பிரசாரம் செய்யும் அமமுக வேட்பாளர்

தேனிலவு செல்லாமல் பிரசாரம் செய்யும் அமமுக வேட்பாளர்

2 mins read
b8b0196a-951b-4aeb-9ad4-eb2ce88b6dd0
குக்கரை கையிலேந்தி வாக்கு கேட்கும் முரளிதரன். படம்: ஊடகம் -

புதுச்­சேரி: புதுச்­சே­ரி­யின் மங்­க­லம் தொகு­தி­யில் அம­முக கட்­சி­யின் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­யுள்ள முர­ளி­த­ரன், அண்­மை­யில்தான் திரு­ம­ணம் முடித்­துள்­ளார்.

தமி­ழ­கம், புதுச்­சேரி சட்­ட­மன்­றத் தேர்­த­லில் டிடிவி தின­க­ரன் தலை­மை­யி­லான அம­முக கட்சி போட்­டி­யி­டு­கிறது.

இந்­நி­லை­யில், புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் முரளி தரன், "நான் சமூக சேவை­க­ளி­லும் அர­சி­ய­லி­லும் அதி­க­மாக ஈடு­பட்டு வந்­த­தால் பல­ரும் எனக்கு பெண் கொடுக்க மறுத்­து­விட்­ட­னர்.

"45 வய­தாகிவிட்ட நிலையில் கடந்த மாதம்தான் திரு­ம­ணம் நடந்­தது. திரு­ம­ணம் முடிந்த கையோடு பிர­சா­ரம், வாக்­குச் சேக­ரிப்பு என தேர்­தல் வேலை­களில் பரபரப்பாக ஈடு­பட்டு வரு­கி­றேன்.

"இத­னால், என் மனை­வி­யு­டன் நான் இன்­னும் சரி­யா­கக் கூட பேச­வில்லை," எனக் கூறும் அவர், "தேனி­ல­வுக்­கும் செல்­லா­மல் தேர்­தல் பிர­சா­ரத்­தை தொடர்கிறேன்," என்­கி­றார்.

"மக்­க­ளுக்­காக நீண்ட நாட்­களாகச் சேவை­யாற்றி வரு­கி­றேன். நான் வெற்­றி­பெற்­றால் புதுச்­சே­ரி­யின் முதன்மை தொகு­தி­யாக வில்­லி­ய­னூரை மாற்றுவேன். இளை­ஞர்­க­ளுக்கு முறை­யாக நேரடி நிய­ம­னம் மூலம் அரசுத் துறை­யில் காலி­யாக உள்ள 9,000 பணி­யிடங்­களை நிரப்ப நட­வ­டிக்கை எடுப்பேன். தொகுதிதோறும் அனைத்து கிரா­மங்­க­ளி­லும் அலு­வ­ல­கம் அமைத்து மக்­களை நேரில் சந்­திப்­பேன்.

"சிறு­வர்­கள்- இளை­ஞர்­கள்- முதி­ய­வர்­கள் பயிற்சி பெற விளை­யாட்டு மைதா­னம் அமைக்­கப்­படும்," என்று தனது வாக்குறுதிகளை அறிக்­கையாகவும்­ வெளி­யிட்­டு உள்ளவர், அதில் தனது தொலை­பேசி எண்­ணை­யும் குறிப்­பிட்­டுள்­ளார்.

நான் வெற்றி பெற்றால், மக்கள் என்னைத் தேடி வரும் தேவை இருக்காது. நானே அவர்களைத் தேடிச்சென்று சேவையாற்றுவேன்.

சின்ன வயது முதலே எனக்கு அரசியலை விட்டால் வேறொன்றும் தெரியாது.

அமமுக வேட்பாளர் முரளிதரன்