சென்னை: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் நேற்று பேசிய அவர், "சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது," என்று கூறியவர், "ஒருவேளை கிருமி பாதிப்பு மேலும் அதி கரித்தால் அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மட்டும் படிப்படி யாக கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்று கூறினார்.

