ஓபிஎஸ் வீட்டில் முதல்வர் இபிஎஸ்; சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம்

சென்னை: தமி­ழக துணை முதல்­வர் ஓபி­எஸ் போட்­டி­யி­டும் போடி தொகு­திக்­குச் சென்ற முதல்­வர் இபி­எஸ் ஓபிஎஸ்ஸுக்கு ஆத­ர­வாக பிர­சா­ரம் செய்­தார்.

அப்­போது ஓபி­எஸ்ஸை முதல்வர் புகழ்ந்து தள்­ளி­னார்.

போடி தொகு­திக்­காக துணை முதல்­வர் நிறை­வேற்­றிய திட்­டங்­கள் அனைத்­தை­யும் வரி­சை­யாக இபி­எஸ் பட்­டி­ய­லிட்­டார்.

"இறை­வ­னால் உங்­க­ளுக்கு அரு­ளப்­பட்ட கொடை­தான் அண்­ணன் ஓபி­எஸ். அவர் எங்­க­ளுக்­கும் கிடைத்த பெரும் பாக்­கி­யம்," என்று புகழ, அரு­கில் நின்ற ஓபி­எஸ்­ஸும் உருகிவிட்­டார்.

பிறகு சுப்­பு­ராஜ் நக­ரில் உள்ள தனது வீட்­டுக்கு இபி­எஸ்சை ஓபி­எஸ் அழைத்­துச் சென்­றார்.

அப்­போது இரவு 9:00 மணி. ஓபி­எஸ்­சின் இரு மகன்­கள், மரு­ம­கள்­கள், பேரப் பிள்­ளை­கள் என எல்­லோ­ரும் முதல்­வரை வர­வேற்­ற­னர். வீட்­டில் நட­மாட முடி­யா­மல் அமர்ந்­தி­ருந்த தாய் பழ­னி­யம்­மாவை துணை முதல்­வர் முதல்வருக்கு அறி­மு­கம் செய்­தார்.

"முத­ல­மைச்­சர் பழ­னி­சாமி வந்­தி­ருக்­கார்," என்று அம்­மா­வி­டம் ஓபி­எஸ் சொல்ல, பழ­னி­யம்­மாள் கை உயர்த்தி ஆசி வழங்­கி­னார்.

காலைத் தொட்டு வணங்கிய முதல்வருக்கு அவர் திருநீறு பூசி வாழ்த்தினார். அந்தப் படம் தற் போது வெளியாகி சமூக ஊடகங் களில் வேகமாகப் பரவி வருகிறது. அதிமுகவில் கோஷ்டி பூசலை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்துள்ள வேளையில் இந்தப்படம் அதிமுகவினருக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!