ராகுல் அடிக்கடி பெண்கள் கல்லூரிக்குச் செல்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொருமல்

திரு­வ­னந்­த­பு­ரம்: காங்­கி­ரஸ் கட்­சி­யின் முன்­னாள் தலை­வ­ரும் வய­நாடு எம்­பி­யு­மான ராகுல் காந்தி எப்­போ­தும் பெண்­கள் படிக்­கும் கல்­லூ­ரிக்­குச் சென்று பேசு­கி­றார் என்று முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் பொரு­மி­யி­ருக்­கி­றார்.

கேர­ளா­வில் 140 தொகு­தி­க­ளுக்­கும் வரும் ஏப்­ரல் 6ஆம் தேதி ஒரே கட்­ட­மாக சட்­டமன்றத் தேர்தல் நடக்­கிறது.

இதில் ஆளும் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் தலை­மை­யி­லான இட­து­சாரி ஜன­நா­ய­கக் கூட்­ட­ணிக்­கும் காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான ஐக்­கிய ஜன­நா­யக முன்­ன­ணிக்­கும் கடும் போட்டி நடந்து வரு­கிறது.

கடந்த வாரம் ராகுல் காந்தி கொச்­சி­யில் செயின்ட் தெரேசா கல்­லூ­ரிக்குச் சென்று மாண­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டல் நடத்­தி­னார். அங்­குள்ள மாண­வி­கள் கோரிக்­கையை ஏற்று தான் பயின்ற அய்­கிடோ கலை­யைக் கற்­றுக்­கொ­டுத்­தார்.

இதைச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள இடுக்கி முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி மூத்த நிர்­வா­கி­யு­மான ஜாய்ஸ் ஜார்ஜ், "ராகுல் காந்தி ஏன் எப்­போ­தும் பெண்­கள் படிக்­கும் கல்­லூ­ரிக்­குச் சென்று பேசு­கி­றார்," என்று கூறியுள்ளார்.

"பெண்­க­ளுக்குத் தற்­காப்பு கலையை கற்­றுக்­கொ­டுக்­கி­றேன் என்று கூறி நேராக நில்­லுங்­கள், குனிந்து, வளைந்து நில்­லுங்­கள் என்று பெண்­கள் அருகே ராகுல் செல்­கி­றார்.

"பெண்­கள் அருகே ராகுல் காந்தி செல்­லக்­கூ­டாது. இது­போன்றும் செய்­யக்­கூ­டாது. ராகுல் காந்­தி­யு­டன் பேசும்­போது பெண்­கள் சற்று முன்­னெச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்­டும். ராகுல் காந்தி திரு­ம­ண­மா­கா­த­வர், சிக்­கலை உரு­வாக்­கக்­கூ­டி­ய­வர்," என்­றார்.

இந்­தப் பேச்சு சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலை­யில் இதற்­குப் பதில் அளித்­துள்ள முதல்­வர் பின­ராயி விஜ­யன், இது இட­து­சாரி ஜன­நா­யக முன்­ன­ணி­யின் கருத்து அல்ல என்று கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!