சென்னை: ஜனவரி மாதம் 16ஆம் தேதி இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது. முதலில் சுகாதார ஊழியர்களுக்கு ஊசி போடப்பட்டது.
பிப்ரவரி 2ஆம் தேதி முதல் முன் களப்பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி நடந்தது.
மார்ச் 1ல் இருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட பல்வகை நோய்த் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
இதுவரை நாடு முழுவதும் 7 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை சென்னையில் 7.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது.
இதற்காக தடுப்பூசி நிலையங்கள் நாடு முழுவதும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நாளை 2ஆம் தேதி கூடுதலாக 12 லட்சம் கோவிஷீல்டு மருந்துகள் சென்னைக்கு வரவழைக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

