தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கௌதமி: மக்களை மயக்க மநீம கட்சி தந்திரம் செய்கிறது

1 mins read
50d6262c-7451-41c5-807c-92c7cdf72051
-

சென்னை: கடந்த சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு கமல்­ஹா­ச­னு­ட­னான நட்பை முறித்துக்கொண்ட நடிகை கௌதமி, அண்­மை­யில் பார­திய ஜனதா கட்­சி­யில் இணைந்­தார்.

சட்­ட­மன்­றத் தேர்­த­லில் ராஜ­பாளை­யம் தொகு­தி­யில் இவர் போட்­டி­யி­டு­வார் என்று கூறப்­பட்­டது. ஆனால், அந்த தொகுதி அதி­மு­க­வுக்கு ஒதுக்­கப்­பட்­ட­தால் இவர் போட்­டி­யி­ட­வில்லை. இந்­த­நி­லை­யில் நடிகை கௌதமி சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­னார்.

அப்­போது அவ­ரி­டம் கமல்­ஹா­ச­னைப் பற்றி கேள்வி கேட்­கப்­பட்­டது. அதற்கு அவர், கமல்­ஹா­சனைப் பிரிந்து பல ஆண்­டு­கள் கடந்துவிட்­டது. அது முடிந்­து­போன கதை. அது பற்றி இனி பேச­வேண்­டாம்.

பார­திய ஜனதா கட்சி தலை­வர்­க­ளான வாஜ்­பாய், மோடி மீது மிகுந்த மரி­யாதை வைத்­துள்­ளேன். கடந்த 23 ஆண்­டு­க­ளாக பாஜக மீது எனக்கு ஆர்­வம் இருந்­தது. அதன் கார­ண­மா­கவே இக்­கட்­சி­யில் இணைந்­தேன்.

மக்­கள் நீதி மய்­யம் மாற்­றத்தைக் கொண்­டு­வ­ரு­வோம் என்­கி­றார்­கள். அந்த மாற்­றத்தை மக்­கள் விரும்­பு­கி­றார்­களா? என்­பதை முத­லில் தெரிந்­து­கொள்ள வேண்­டும். அது வாக்கு எண்­ணிக்கை நடை­பெ­றும் மே 2ஆம் தேதிக்குப் பிறகு தெரி­யும்.

ஒவ்­வொ­ரு­வ­ரும் புதிய கட்சி தொடங்­கும்­போது இது­போன்று மாற்­றங்­க­ளைக் கொண்டு வரு­வோம் என கூறு­வது வழக்­க­மான ஒன்­று­தான். அவ்­வ­கை­யில் கமல்­ஹா­ச­னின் மக்­கள் நீதி மய்­ய­மும் இது­போன்ற வியாபாரத் தந்­தி­ரத்­தைக் கடை­ப்பி­டிக்­கிறது.

மக்­கள் நீதி மய்­யம் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தால் தி.மு.க. கூட்­ட­ணி­யின் வாக்­கு­கள் பிரி­யுமா? என்­பது பற்றி எனக்குத் தெரி­ய­வில்லை. அப்­படி பிரிந்­தால் அது அதிமுக - பாஜக கூட்­ட­ணிக்குத்தான் சாத­க­மாக இருக்­கும் என்று கௌதமி கூறி­னார்.