'தமிழகத்தில் தாமரை என்றும் மலராது'

'தமிழகத்தில் தாமரை என்றும் மலராது'

1 mins read
98b10dcc-1d95-4f71-945b-3dd95b0d8a05
கார்த்தி சிதம்­ப­ரத்­தின் மனை­வி­ ஸ்ரீநிதி. படம்: ஊடகம் -

சென்னை: காங்­கி­ரஸ் கட்­சி­யின் சிவ­கங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்­ப­ரத்­தின் மனை­வி­யும், முன்­னாள் மத்­திய நிதி­ய­மைச்­சர் ப.சிதம்­ப­ரத்­தின் மரு­ம­க­ளான ஸ்ரீநிதி கார்த்திக் சிதம்­ப­ரம் நாட்­டி­யம் ஆடும் படத்­தைப் பயன்­படுத்தி தாமரை மல­ரட்­டும் என்று குறிப்­பிட்டு பாஜக தனது டுவிட்­டர் பக்­கத்­தில் பதிவிட்டிருந்தது. அதற்கு காங்­கி­ரஸ் கட்சி கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது. பாஜ­க­வின் செயல் முற்­றி­லும் ஏற்­பு­டை­ய­தல்ல என கூறிய ஸ்ரீநிதி, தமி­ழ­கத்­தில் தாமரை என்­றுமே மல­ராது என தமி­ழில் டுவிட் செய்­துள்­ளார்.

செம்­மொழி மாநாடு நடந்­த­போது அப்­போ­தைய முதல்­வர் கரு­ணா­நிதி எழுத்­தில் உரு­வான செம்­மொ­ழி­யாம் தமிழ்­மொழி பாட­லுக்கு ஏ.ஆர்.ரஹ்­மான் இசை­ய­மைத்­தி­ருந்­தார். அந்­தப் பாட­லில் ஒரு காட்­சி­யில் கார்த்தி சிதம்­ப­ரம் மனைவி ஸ்ரீநிதி கார்த்திக் நட­ன­மா­டி­யி­ருப்­பார்.

இந்­நி­லை­யில், கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அந்­தக் காட்சி அடங்­கிய காணொளிப் பதி­வு­டன் தமி­ழக பாஜக தனது அதி­கா­ர­பூர்வ டுவிட்­டர் பக்­கத்­தில் பகிர்ந்து, அதில் 'தாமரை மல­ரட்­டும்; தமி­ழ­கம் வள­ரட்­டும்; வாக்­க­ளிப்­பீர் தாம­ரைக்கே' என்று பதி­விட்­டி­ருந்­தது.